கிழக்கின் மருத்துவதுறையை மேம்படுத்த முயற்சி கிழக்கு முதல்வர் தெரிவிப்பு.

(எப்.முபாரக்)

கிழக்கில் மருத்துவத்துறையை  மேம்படுவத்துவதற்கான முயற்சிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னெடுத்து வருகின்றார்.

இதனடிப்படையில் கிழக்கின் மருத்துவத் துறையை கட்டியெழுப்ப புதிய முதலீடுகளை பெற்றுக் கொள்வது    தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இந்திய முதலீட்டாளர்களிடையே சந்திப்பொன்று இடம்பெற்றது.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய இலங்கை வர்த்த பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மனவை அசோகனும் கலந்து கொண்டார்.

இதன் போது  120 மில்லியன் டொலர்களை கிழக்கின் மருத்துவம் மற்றும் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


ஆயுர்வதே  மத்திய நிலையம் மற்றும் புற்று நோய் மருத்துவமனையொன்றினையும் கிழக்கில் நிர்மாணிப்பதற்கு முதலீட்டாளர்கள் இதன் போது விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமன்றி பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையொன்றினை கிழக்கில் நிர்மாணித்து கிழக்கு மாகாண மக்கள் தமது மருத்துவ தேவைகளை கிழக்கு மாகாணத்துக்கு உள்ளேயே நிறைவேற்றுக் கொள்வதற்கான வாய்ப்பொன்றையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்,

இதேவேளை தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மற்றும் ஹோட்டல்களையும் கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிப்பதற்கு முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கிழக்கை பல்வேறு துறைகளிலும் கட்டியயெழுப்பவும் முதலீடுகளை ஊக்குவிக்கவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.