மாற்றுத்திறனாளிகளால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானம்.

(விஜய் )
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் சிரமதானப்பணி இன்று(3) வாழைச்சேனை  ஆதார வைத்தியசாலையில் வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேற்படி, சிரமதானப்பணி காலை ஏழு மணியளவில்  ஒன்றுகூடல் நிகழ்வின் பின்னர் 7.30 மணிக்கு ஆரம்பமாகி 10.30 மணிவரை நடைபெற்றது.

சர்வதேச ரீதியில் மாற்று திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எஃப்.பீ.மதன் தலைமையில் கோறளைப்பற்று(வாழைச்சேனை) சமூக சேவைகள் உத்தியோகதர் ஏ.நஜீம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் மனநோயாளர்களின் நலனை நோக்கமாக கொண்டு மேற்படி வைத்திய சாலையின் மனநோயாளர் சிகிச்சை பிரிவில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இச்சிரமதானத்தில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகள், ஏனைய மாற்று திறனாளிகள், மாற்று திறனாளிகளின் பெற்றோர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.