வாகரை பிரதேசத்தில் அமைப்பாளர் வே.மகேஸ்வரனால் குறைபாடுகள், சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகள் ஆராய்வு

(வாழைச்சேனை நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின்  அமைப்பாளர் வே.மகேஸ்வரன் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆதிவாசிகளைச் சந்தித்தார்.

அவர்   மிகவும் பின்தங்கிய கிராமங்களான  குஞ்சம் குளம் மற்றும் கதிரவெளி
போன்ற இடங்களுக்கு  சென்று அங்கு வாழ்கின்ற ஆதிவாசி பழங்குடியினரை சந்தித்து அவர்களது குறைபாடுகளையும் சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளைக்  கேட்டறிந்து கொண்டார்.


மேலும் கடல் தொழில் மீன் பிடி நடவடிக்கையின்போது வாகரை-கதிரவெளி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய  நடவடிக்கையினால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையின் அவல  நிலைமை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் ஜக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை சேர்க்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டது.


 சமூர்த்தி  பயணாளிகளுக்கான முத்த்pரைகள்  வழங்கும்போது இலஞ்சம் வழங்கவேண்டிய நிலை ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.


அண்மையில் மாங்கேணி சமுர்த்தி வங்கியின் வளவிற்கு சுற்றுவேலி அமைப்பதற்கும் குடி தண்ணீர் வசதியை ஏற்படுத்துவதற்கும் தங்களிடமே பணம் அறவிடப்பட்டது. இது தொடர்பாக விளக்கமளிக்கப்படவில்லை  என்றும்  பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை தாம் விவசாயம் மற்றும் சிறுதோட்டப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்கான நீர்வசதியினை மாதுறு ஓயாவின் மூலம் பெற்றுக் கொள்வதற்கு வடிகால் அமைக்க பிரதேச செயலாளரிடம் அனுமதி கேட்டபோது அதற்கான அனுமதி இதுவரையும் வழங்கப்படவி;ல்லை என்றும் மக்கள் கூறினர். எனவே அதனை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  ஆதி வாசிகள்  அமைப்பாளருடனான கலந்துரையாடலின்போது தெரிவித்தனர்.

 பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல் மார்சல் ஜெனரல் சரத்பொன்சேகா  பணிப்புரையின் அடிப்படையில்  பின்தள்ளப்பட்ட கிராமங்களில்  நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன்   அவ்விடங்களுக்கு   நேரில் சென்று பார்வையிட்டதாகவும் இது தொடர்பாக பிராந்திய அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு தெரிவிக்கவுள்ளதாகவும் அமைப்பாளர்  மக்களிடம் தெரிவித்தார்.