வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

2017 கல்வியாண்டிற்கு தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் ச.கணேசமூர்த்தி தலைமையில் இன்று (11) நடைபெற்றது

இதன்போது தரம் 2 மாணவர்களால் தரம் 1 மாணவர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். பிரதம அதிதியாக பாடசாலையின் PSI இணைப்பாளரான பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஆசிரிய வளநிலைய முகாமையாளர் சி.குருபரன் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதியாக வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி அ.குணராஜசேகரம் அவர்களும் கௌரவ அதிதியாக பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் மா. நாகமணியும் கலந்து கொண்டனர்.