மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம் ஒன்று(1)மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(க.விஜயரெத்தினம் )

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம் ஒன்று(1)மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (19.1.2017) வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் பாடசாலையில் உள்ள கார்ட்மண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம்.அசங்க அபேவர்த்தன அவர்களும்,விஷேட அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும்,கௌரவ அதிதிகளாக பிரதியதிபர் இராசதுரை பாஸ்கர் ,பொறியலாளர் வை.கோபிநாத்,பழைய மாணவர் சங்க  செயலாளர் எஸ்.சசிகரன்,ஆகியோர்களுடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்  கலந்துகொண்டார்கள்.


இதன்போது தரம் ஒன்றைச் சேர்ந்த 110 மாணவர்களுக்கு வர்ணமாலைகள் அணிவித்து இனிப்பு கொடுத்து வரவேற்கப்பட்டது.இதன்போது தலைமையுரை, அதிதிகள் உரை, தரம் இரண்டைச் சேர்ந்த மாணவர்களின் நடனம், பாடல்,அபிநயம், வில்லுப்பாட்டு என்பன போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.தரம் ஒன்று மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட  ஆக்கத்திறன் கண்காட்சியும் பிரதம அதிதியினால் பார்வையிடப்பட்டது.