2017ல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை

2017 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான சுற்றுநிரூபம் பாடசாலை அதிபர்களுக்கு அடுத்த வாரத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

15 வயதைப் பூர்த்தி செய்துள்ள மற்றும் மார்ச் 31ம் திகதி 15 வயதை நிறைவு செய்யும் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியுமென்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜெனரல் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட விண்ணப்பப்பத்திரங்களை பாடசாலை அதிபர்கள் மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.


பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என்பதை ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மாணவர்கள் பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.