கல்லடியில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

(S.சஜீத்)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் நேற்று  இரவு (9.30) மணியளவில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகின. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்து வந்த இரு நபர்களும் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக வேண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


இது தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர்.