உள்ளூராட்சி மன்றங்களுக்கு புகைவிசுறும் கருவிகள் வழங்கிவைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் .

டெங்கு நுளம்புகளை விரட்டியடிக்கும் முகமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு புகை விசிறும் கருவிகளை வழங்கி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் தெரிவித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (22.01.2017) மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை ஆகியவற்றுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அவர்களினால் தலா இரண்டு புகை விசிறும் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதனால் இந்த புகை விசிறும் இயந்திரங்களின் மூலம் டெங்கு பரவக்கூடிய பிரதேசங்களில் டெங்கு தாக்கம் ஏற்படுத்துவதை இவ்வாறான உடனடி ஏற்பாடுகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும். என இந் நிகழ்வின்போது முதலமைச்சர் தெரிவித்தார்.



வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு புகை விசிறும் கருவிகளின் பெறுமதி சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம்  ரூபாவாகும்.