மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் "பொலீத்தின் பாவனை முற்றாக ஒழிக்கப்படும்

(க.விஜயரெத்தினம் ) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில்   "பொலீத்தின் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்"  என மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தெரிவித்தார். முதலாம் தவணைக்கான பாடசாலை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. மெதடிஸ்தமத்திய கல்லூரியின் முதலாம் தவணைக்கான  முதலாவது ஒன்றுகூடல் நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே எமது பாடசாலையில் பொலீத்தின் பாவணை முற்றாக ஒழிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.


பிரதியதிபர் இராசதுரை- பாஸ்கர்,ஆசிரியர்கள், மாணவர்கள்  ஆகியோர்கள் முன்னிலையிலேயே இதனைத் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து பேசுகையில்:- எமது நாட்டில் உள்ள ஜனாதிபதி செயலகத்தினால் நாடு பூராவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்  "சுற்றாடலைப் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை" கட்டியேழுப்பமுடியும். இதனால் சூழல் மாசடைவுகளை நிறுத்த முடியும்.சுற்றாடலை மாசுபடுத்தக் கூடியவர்களுக்கு சட்டங்கள் இயற்றப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகள் ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில்  நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.அந்த வகையில் சுற்றாடலை அதிகமாக மாசுபடுத்துவது பொலீத்தின் பாவணையாகும்.பொலீத்தின் பாவணையை குறைப்பதற்கு சட்ட நடவடிக்கை எடுத்தாலும் பொலீத்தின் பாவணை குறைந்தபாடில்லை.பொலீத்தின் பாவணை அதிகரித்து கொண்டே போகின்றது. இதற்கு காரணம் நாட்டில் மக்களிடமும்,மாணவர்களிடமும்  சுற்றாடல் ரீதியான விழிப்புணர்வு இல்லாததும்,சுற்றாடல் ரீதியான அறிவும் இல்லாதது ஆகும்.சுற்றாடலில் பொலீத்தின் பாவணையால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி தெரியாதவர்களும் உள்ளார்கள்.தனியோருவர் விடும் பிழையினால் சூழலில்  எல்லோரும் பாதிக்கப்படுகின்றார்கள்.எனவே எதிர்வரும் 19 ஆம் திகதி (19.1.2017) எமது பாடசாலையில் பொலீத்தின் பாவணையை தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.இதற்கு பிரதியதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள்,சுற்றாடல் கழக மாணவர்கள், பெற்றோர்கள்  எனக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அப்போது தான் எமது பாடசாலையில் முழுமையாக பொலீத்தினை ஒழிக்கமுடியும்.இந்தவிடயத்தில் பெற்றோர்கள் தங்களுக்குரிய பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் உணவில்,உணவுப்பொதிகளில் பொலீத்தின்,ரிசுத்தாள்,ஷொப்பீன்,உணவு பொதியிடல் பைகளை இல்லாமல் செய்து தங்களின் பிள்ளைகளுக்கு வழங்க பழைய முறையில் வழங்க  வேண்டும்.அதாவது உணவுப்பெட்டியில் பொலீத்தின்,லஞ்சீற்,ஷொப்பீன் உறைகளை தவித்து அனுப்ப வேண்டும்.19 ஆம் திகதிக்கு பின் ஒவ்வொருவரும் கொண்டுவரும் உணவுப்பொதிகளில் பொலீத்தின் இருக்கின்றதா என்பதை பாடசாலை சுற்றாடல் கழகம் பரிசோதனை செய்யும்.இந்தவிடயத்தில் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது.மாணவர்கள் பொலீத்தின் விடயத்தில் உக்கக்கூடிய பொருட்கள் ,உக்கமுடியாத பொருட்கள் எனத்தரம் பிரித்து பாடசாலையில் உள்ள குப்பைத்தொட்டிக்குள் போடவேண்டும்.குப்பைத்தொட்டியை விட நீங்கள் சாப்பிடும் "பொலீத்தினையும்,குப்பைகளையும் வெளியே வீசக்கூடாது" எனக் தங்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன் எனக் தெரிவித்தார்.