அரச உத்தியோகஸ்தர்களுக்கான புதிய அரசியலமைப்பினைத் தயாரித்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும்,கொழும்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகமும் இணைந்து மட்டக்களப்பில் உள்ள அரச உத்தியோகஸ்தர்களுக்கான புதிய அரசியலமைப்பினைத் தயாரித்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டும் செயலமர்வினை நடாத்தியது.

இந்நிகழ்வு திங்கட்கிழமை (20.3.2017) காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 4.00 வரையுள்ள காலப்பகுதியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ். எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இப்புதிய அரசியலமைப்பினைத் தயாரித்தல் தொடர்பான வளவாளர்களாக பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும்,அரசியல் விஞ்ஞான பீடப்பொறுப்பதிகாரியுமான என்.பீ.எம்.சஜப்டீன்,யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.கோதை மதன்,அரசியல் சீர்திருத்த பொது பிரதிநிதித்துவ அமைப்பின் உறுப்பினர் சீ.இளங்கோவன் ஆகியோர்கள் விரிவுரைகளை செய்தார்கள்.


இதன்போது மாவட்டத்தில் உள்ள 14பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்கள்,நிருவாக உத்தியோகஸ்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,கிராமசேவை உத்தியோகஸ்தர்கள்,உட்பட சுமார் 600பேர் கலந்துகொண்டார்கள்.இதன்போது யாப்பு சீர்திருத்தம், யாப்புப்பயன்கள்,அரசகருமமொழியாக்கம்,சிறுபான்மை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள்,நாடாளவிரீதியில் அரசகரும மொழிப்பிரச்சனை,புதியஅரசியலமைப்பு சீர்திருத்தத்தின் நன்மைகள் என்பன தெளிவாக ஆராயப்பட்டது.