மட்டக்களப்பில் எதனோல் தயாரிப்பு தொழில்சாலை சாதகமா ? பாதகமா ?

(லட்சுமி )
ஆரம்பம் :- மட்டக்களப்பில் இவ்வாறான தொழில்சாலை ஒன்று வர இருக்கிறது என்பது மட்டக்களப்பு அரச அதிகாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அபிவிருத்தி குழு தலைவர் உறுப்பினர்களுக்கும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியாமல் வர வாய்ப்பில்லை. வந்துவிட்டது கட்டப்பட ஆரம்பித்து விடப்பட்டுள்ளது.

இனி நடக்கபோவது :- இதை ஆரம்பித்தவர்கள் சாதாரண வீதி ஒர வியாபாரிகள் இல்லை சட்டென ட்ராக்ட்டரில் ஏற்றி செல்ல ஒத்து போகவேண்டிய நிலைமை ஒத்து போகாவிட்டால் பதவியே போகவேண்டிய நிலைமை.
ஆக யார் எதிர்த்தாலும் வேலை நடக்கும்.

பாதகமும் அதற்கான விடைகளும் :-

01) நில கீழ் நீர் உறிஞ்சல் - இதனால் நில கீழ் நீர் உறிஞ்சல் ஏட்படுமாயினும் அமைக்கப்பட்டுள்ள பிரதேசம் நிலக்கீழ் நீர் ஊற்று அதிகமாக உள்ள பிரதேசமாகும் ஆனாலும் மக்கள் குடியிருப்புகள் அதிகமாகவுள்ள பிரதேசத்தில் பிரதான வீதி அருகே இரண்டு ஐஸ் தொழில்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது இது பரவாயில்லை எனவே தோணுகிறது.

இதற்கான  நீரை நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபை வழங்க  முன்வந்தால் இந்த பிரச்சனையும் இல்லை .

02) கழிவு நீர் வெளியேற்றம் :- இப்போதைய கால கட்டத்தில் கழிவு நீரை மீள்சுழட்சிக்கு உட்படுத்தும் தொழில்நுட்பம் இல்லாத தொழில்சாலைகள் அனுமதி மறுக்கப்படுகின்றன அவ்வாறு இல்லாவிடினும் அந்த பகுதி சுகாதார பரிசோதகருக்கு அதிகாரம் உண்டு அதை சரியாக கண்காணிக்க.
நம்மவர்கள் கடமை கண்ணியம் உள்ளவர்கள் சட்ட நடவடிக்கை துணிந்து எடுக்க கூடியவர்கள் எனவே சற்று ஆறுதல்

03) நெல் சோளம் என்பவற்றில் ஏட்படப்போகும் தட்டுப்பாடு - நம்மவர்கள் உற்பத்தியை அதிகரிக்கவேண்டும்

04) நில அபகரிப்பு - நம்மவர்கள் நம் இடங்களை விற்பனை செய்யாமல் இருந்தால் யாரும் யார் நிலங்களையும் அபகரிக்க முடியாது நம்மவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தவேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளின் கையில் உள்ளது

05) கலாச்சார பாதிப்பு - இது வேடிக்கையான கதை உல்லாச துறை வளர்ந்துவரும் ஒரு இடத்தில் மென்மேலும் இது கெட்டு போகுமே தவிர குறைவடையாது.இது அவரவர் மனநிலை குடும்ப சூழ்நிலை வறுமை சம்பந்தப்பட்டது.


06) பயிர்ச்செய்கை நில பாதிப்பு :- தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பிரதேசம் பயிர்ச்செய்கை சேனை செய்கை வயல்கள் இல்லாத பிரதேசம்

சாதக நிலைமை :- 
01) வேலை வாய்ப்பு - இதை நிறுத்த முடியாது என தெரிந்தால் நம் அதிகாரிகள் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி 75% நம் பிரதேச வாசிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஏட்பாடு செய்தல் வேண்டும் அவ்வாறு செய்தாலும் நம்மவர்கள் நின்று ஒழுங்காக வேலைசெய்தல் வேண்டும் இடையில் விட்டு ஓடிவிட்டு பின் சிங்களவர்களை கொண்டுவந்து விட்டார்கள் என்பதில் பலனில்லை (உதாரணம் ஹோட்டல்கள்)

02) நெல் சோளம் என்பவற்றுக்காக கேள்வி நம்மவர்கள் விளைச்சலை கூட்டவேண்டிவரும் விவசாய வசதிகள் கிடைக்கக்கூடிய தன்மை .

03) பிரதேசத்தில் ஒரு தொழில்சாலை அமைவு :- இதனை பார்வை இட அனுமதித்தால் உள்ளூர் சுற்றுலா பிரயாணிகள் வருகை பாடசாலை மாணவர்கள் வருகை இதனால் சிறு கடை சிற்றுண்டி வியாபாரிகளுக்கு வாய்ப்பு

04) முஸ்லிம்கள் இதற்கு வேலைக்கு செல்ல வாய்ப்பில்லாததால் தமிழர்களுக்கு அதிக வாய்ப்பு

05) கரும்பு செய்கை நம்மவர்கள் செய்வதக்கான வாய்ப்பு - கரும்பும் முக்கிய மூலப்பொருள் என்பதால் நம்மவர்கள் இதில் ஈடுபட்டு லாபமீட்டும் வாய்ப்பு.

06 ) இடைத்தரகர்கள் லாபமீட்டும் வாய்ப்பு குறைந்து உற்பத்தி செய்பவனுக்கு லாபமீட்டும் வாய்ப்பு கூடலாம்

இது மதுபானம் தயாரிக்க தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான எதனோல் தயாரிக்கும் தொழில்சாலை இந்த எத்தனோலை நேரடியாக பருக்கமுடியாது அதோடு இதை தொழில்சாலையில் இருந்து சில்லறையாக விற்பனை செய்யவும் முடியாது இந்த எதனோல் மதுபான தயாரிப்பு தொழில்சாலைக்கு சென்று முடிவு பொருளாக விநியோகஸ்தர்கள் மூலம் மீண்டும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு வந்தாலே வாடிக்கையாளர்கள் வாங்கி குடிக்கலாம்.
எனவே மதுபான விற்பனை நிலையங்கள் அதிகரித்ததாலே விற்பனை அதிகரிக்க வாய்ப்புண்டு.

சில சூழல் பாதிப்பு நிகழ்வுகள் ஏட்பட வாய்ப்பு உள்ளது ஆனாலும் அதனை தவிர்க்கக்கூடிய பல நவீன வசதிகள் உண்டு ஆனாலும் ஒரு தொழில் பேட்டைகள் அமைக்கப்படும்போது இவை தவிர்க்கமுடியாதவை.

உலகில் அநேகமாக நாடுகளில் உள்ள தொழில்சாலையே இது இங்கு அமைக்க முடியாவிட்டால் எங்காவது அமையும் அதில் மாற்றமில்லை எமது பிரதேசத்துக்கு வரும் ஒரு திட்டத்தை எதிர்க்கும் மனோநிலைமையை எப்போதும் கொண்டுள்ள நாம் அதேபாணியில் எதிர்க்காமல் அதில் உள்ள சாதக பாதக நிலைமைகளை ஆராந்து உண்மையில் அது நம் பிரதேசத்துக்கு பாதகமாக அமைந்தால் அதை தெளிவாக குறிப்பிட்டு மக்களை தெளிவுபடுத்துங்கள்.
எல்லாவற்றுக்கும் பண்பாடு கலாச்சாரம் என்று பேசாமல் மக்கள் நலன் அல்லது பாதக நிலைமை அறிந்து செயல்பட்டால் நல்லது.
ஏற்கனவே நம் கல்லடி பிரதேசத்தில் சிறிய அளவிலான ஒரு எதனோல் தயாரிக்கும் நிலையம் இருந்தது எத்தனை பேருக்கு தெரியும் ?

ஆர்ப்பாட்டம் பல நடந்தன ஆனால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு அது இது என்று ஒருவருமே வேலையை இடை நிறுத்தச்சொல்லி வழக்குத்தாக்கள் செய்யவில்லை ஏன் ????????

மக்கள் வழமையான மனநிலையில் இருந்து சற்று வெளிவந்து பரந்த மனப்பாங்குடன் நன்மை தீமை பற்றி சிந்தித்து செயல்பட வேண்டிய காலகட்டம் இது.

இந்த பதிவு அந்த தொழில்சாலை அமைக்கப்படவேண்டும் என்பதல்ல சாதக பாதக நிலைமைகளை ஆராந்து முடிவுகளை எடுங்கள் என்பதே.