பெரியகல்லாறு செவ்வந்தி சிறுவர் கழக அங்கத்தவர்களின் டெங்கு விழிப்பூட்டல் நடவடிக்கை


(ரவிப்ரியா)

பெரியகல்லாறு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இரா.பிரேமராஜாவின் அறிவுறுத்தலுக்கமைய கிராம உத்தியோகத்தர் ஆர். ராதாகிருஷ்ணனின் பங்களிப்புடன்  பெரியகல்லாறு செவ்வந்தி சிறுவர் கழக அங்கத்தவர்கள் வீதிகள், வீடுகளில்.

பொது இடங்களில் உள்ள டெங்கு குடம்பிகள் உற்பத்தியாகக் கூடிய  பிளாஸ்ரிக் பொருட்களை, ஐஸ்கரீம் கப்புக்கள் என்பவற்றை சேகரித்து அதற்கான போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டதையும். சேகரிக்கப்பட்ட வெற்றுப் பொருட்களையும் படங்களில் காணலாம்.


வளர்ந்தவர்கள் கூட பொறுப்பற்ற முறையில் வீதியோரங்களிலும், பொது இடங்களிலும் வீசி விட்டுச் செல்லும் குறிப்பாக பிளாஸ்ரிக் போத்தல் குவளைகளையும்  மற்றும் உலோக டப்பாக்களையும் சிறுவர்களான உறுப்பினர்கள் கொடிய வெயிலையும் கருத்திற் கொள்ளாது மிகுந்த பொறுப்புணர்வுடன் பொறுமையாகச் சேகரித்த சுமந்து வந்து  அலுவலரிடம் ஒப்படைத்தமையானது சிறுவர்களைப் பொறுத்தவரை சமூகப் பொறுப்புமிக்க நல்லதொரு முன்மாதரியான செயற்பாடாகும். இதை வழி நடாத்திய உத்தியோகத்தர்களும் பாராட்டுக்குரியவர்கள்.