மண்முனை மேற்கு பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிய பெ ஜெ ஹமில்டன் கடந்த திங்கட்கிழமை (24/04/2017) அன்று கடமையிலிருந்து வீட்டுக்கு செல்லும் போது மூளையின் உச்சி நரம்பு வெடித்து ஹோமா நிலைக்கு தள்ளப்பட்ட இவர் கொழும்பு அப்பலோ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 27/04/2017 இல் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர் .
இவருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும் . எதிர்வரும் ஆறாம் திகதி மனைவிக்கு இன்னொரு குழந்தை பிறக்க இருந்த நேரத்திலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இது தொடர்பாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு விலும் எனது கணவரான கமில்டனால் முறைப்பாடு செய்ய பட்டுள்ளது முறைப்பாடு தொடர்பான விசாரணை முடிவுக்கு வரும் முன் அதிக மன அழுத்தம் இவரது தலை உச்சி நரம்பு வெடித்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டு இரண்டு நாட்களில் மரணம் அடைந்து விட்டார் என இறந்தவரின் மனைவி கண்ணீர் மல்க கூறினார் .













