பிரித்தானியாவின் வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டம் பெற்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா .



மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பிரித்தானியாவின் வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தக சட்டத்தில் சட்ட முதுமாணி பட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார் . லண்டனில் முதற்தர நவீன பல்கலைக்கழகமான  வெஸ்ட் லண்டன் பல்கலைக்கலகத்தின் (  University of West London )  பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஜூலை நடைபெற இருக்கிறது .

நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா ஏற்கனவே புலமை பரிசிலில் அமெரிக்கா சென்று அமெரிக்காவின் நோட்ரேடமே பல்கலைகழகத்தில் ( University of Notre Dame) சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தில் சட்ட முதுமாணி பட்டம் பெற்றவர் , மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அமைதி இணக்கப்பாடுகள் தொடர்பில் பட்ட மேற்படிப்பை பூர்த்தி செய்தவர் என்பதும் குறிப்படத்தக்கது.

University of West London


University of West London