வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் அரசியயல் ரீதியில் ஒன்றிணைணந்து பயணிப்பது அவசியம் அமைச்சர் ஹக்கீம்


(சிவம்)
வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் அரசியயல் ரீதியில் ஒன்றிணைணந்து பயணிப்பது அவசியம் என்கின்ற நிலை ஏற்பட்டு அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹைக்கீம் தெரிவித்தார்.

நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபாய் 200 மில்லியன் செலவில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 25 கி.மீ நீளமான வீதிகளுக்கு காபட் இட்டு திறந்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ரவூப் ஹைக்கீமினால் இன்று  (21) முதல் நிகழ்வாக திசவீரசிங்கம் வீதி திறந்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் முனிச் வீதி, புளியயந்தீவு வீதி, டச்பார் வீதி, கல்லடி வேலூர் மற்றும் திசவீரசிங்கம் வீதிகளை உள்ளிட்ட பிரதேச வீதிகள் மக்கள் பாவனைக்கு திறந்து கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்
சட்டம் ஓழுங்கு விடயத்தில் மீண்டும் ஆட்சியாளர்கள் தீவிர சக்தியாளர்களுக்கு அஞ்சுகின்றார்களா என எண்ண வேண்டியுள்ளது. தமித்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் அரசின் முக்கிய பங்கை வகிக்கின்றோம். வடக்கு கிழக்கில் வாழும் நாம் கடந்த கால ஆட்சியாளர்களின் போக்குக் குறித்து நாம் சிந்தித்து எமது உறவுகள் இறுக்கமாக்கப்பட வேண்டும். மட்டக்களப்பு மாட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குறைபாடுகள் பல திட்ட வரைபுகளை செய்து எனது காலத்தினுள் நிறைவேற்றுவேன். கித்துள் றூகத்தை இணைத்தும் மற்றும் உன்னிச்சை குளத்தை புனரமைத்தும் நீர் வழங்கலில் உள்ள குறைபாடுகளைத் தீர்ப்பேன் எனவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், அலிசாகிர் மௌலானா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரக்குமார், ஞா. கிருஸ்ணபிளள்ளை, மா.நடராஜா, கோ.கருணாகரன், இரா.துரைரட்ணம், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.