கடல் மார்க்­க­மாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிவந்த நபர் விளக்கமறியலில்

கடல் மார்க்­க­மாக சட்­ட­வி­ரோ­த­மாக வெளிநா­டு­க­ளுக்கு ஆட்­களை அனுப்பி வந்த குற்­றச்­சாட்டின் பேரில் நீதி­மன்­றினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்டு பொலி­ஸாரால் தேடப்­பட்டு வந்த நபர் கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் 23 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு பொத்­துவில் நீதிவான் நீதி­மன்ற நீதிவான் எம்.ஐ. வஹாப்தீன் நேற்று புதன்­கி­ழமை  உத்­த­ர­விட்டார்.

ஆட்­களை வெளிநாட்டு கடல் மார்க்­க­மாக சட்ட விரோ­த­மாக அனுப்­பிய குற்­றச்­சாட்­டுக்­கெ­தி­ராக நீர்­கொ­ழும்பு நீதி­மன்­றினால் இவ­ருக்­கெ­தி­ராக பிடி­யாணை பிறப்­பிக்­க­பட்­டி­ருந்­தது. இர­க­சியப் பொலி­ஸா­ருக்கு கிடைத்த இர­க­சியத் தக­வ­லை­ய­டுத்து குறித்த சந்­தேக நபர் புதன்­கி­ழமை பொத்­துவில் கோமாரி பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார்.


சந்­தேக நபரை பொத்­துவில் நீதிவான் நீதி­மன்ற நீதிவான் எம்.ஐ. வஹாப்தீன் முன்­னி­லையில் புதன்­கி­ழமை ஆஜர் செய்த போது எதிர்­வரும் 23 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்குமாறும், நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தர விட்டுள்ளார்.