கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரத்த தான நிகழ்வு...



இன்று முள்ளிவாய்க்கால் நினைவை அனுஷ்டிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் பலதரப்பட்ட தரப்புக்களால் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இந்நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இரத்தான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர்
மு. பிரசாந்தன் தலைமையில் இடம்பெறும் மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் H.W.N.I கருணாசேன மற்றும் வைத்தியசாலை தாதியர்கள், ஊழியர்கள், மலேரியா ஒழிப்புக் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலராலும் இரத்தானம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக பூசை வழிபாடுகள் மற்றும் அஞ்சலி சுடர் ஏற்றும் நிகழ்வு என்பனவும் மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்ய்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.