டெங்கு நோயினால் 200 பேர் பலி


நாட்டில் மோசமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன்  63 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சகல அரச வைத்தியசாலைகளிலும் 100க்கும் அதிகாமான  நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நாட்டில் சகல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.  இந்த ஆண்டில் இதுவரையிலான ஆறுமாத காலத்தில் 63 ஆயிரத்து  987  பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக சகல மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவிவரும் நிலையில் நாட்டில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வைத்திய சாலையில்  100 க்கும் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதிக மழைவீழ்ச்சி  காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிளை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் வீட்டு மற்றும் வெளி சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் தொடர்ச்சியாக சுகாதார துறையினர் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் ஒரு நபருக்கு மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல், இருமல் இருக்குமாயின் உடனடியாக வைத்திய உதவிகளை நாடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.