கிழக்குமாகாண ஆசிரியர் இடமாற்றக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கிழக்கு மாகாணக்கல்வி வலயங்களில் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள்  கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயக் கல்வி அலுவலகங்களில் நாளை பெற்றுக்கொள்ள முடியும். 
                                                                       
கிழக்கு மாகாண வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரிய இடமாற்றக் கடிதங்கள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இடமாற்றத்துக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் தத்தமது வலயக்கல்வி அலுவலகங்களுக்கு சென்று தமது கடிதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆசிரியர் இடமாற்றக் கடிதங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாகாண கல்வித் திணைக்களத்தினால் தபாலில் வலயக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. எனினும் தபாலில் ஏற்பட்ட தாமதத்தால் நாளை அல்லது நாளை மறுதினம் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இடமாற்றத்துக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களது இடமாற்ற விண்ணப்பங்கள் இடமாற்ற சபையினால் ஜனவரி மாதமே பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் கற்குடா, மட்டக்களப்பு மேற்கு, மூதூர் போன்ற வலயங்களில் நிலவும் ஆசிரியர் தட்டுப்பாடு காரணமாக பதில் ஆசிரியர்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. 

இருந்தும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக இடமாற்றக் கடிதங்கள் காலம் கடந்தேனும் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஒரு ஆறுதலான விடயம் என்பதனை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.