பின்தங்கிய மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்க இணைந்த கரங்கள் அமைப்பினால் புதூர் பாடசாலைக்கு உதவி

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பின்தங்கிய மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் அதிபரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று அவ்வித்தியாலயத்திற்கு 65 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்ததாக இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகள்  தெரிவித்தனர்.





மாணவர்களுக்குத் தேவையான கற்றல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்நிதி அளிக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (20.07.2017) இடம்பெற்ற காசோலை கையளிக்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர் கே. பாஸ்கரன் மற்றும் இணைந்த கரங்கள் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்களான எம்.சுபராஜ், வீ.பிரபாகரன், எஸ்.டினேஸ்வரன் , ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரியும் புதூர் மற்றும் அதனை அண்டிவாழும் ஐந்து கிராங்களைச் சேர்ந்த அன்பர்களின் பரோபகார நிதிப் பங்களிப்பின் மூலம்
அமைப்பின் பிரதிநிதிகளான எம்.தவராஜ், வீ.வாணிகரன் ஆகியோரின் ஏற்பாட்டுக்கமைவாக இத்தொகை பெறப்பட்டதாக இணைந்த கரங்கள் அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள் தெரிவித்தனர். .

இந் நிதியுதவி இணைந்த கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அழகையா குணரெட்ணம் அவர்களின் ஏற்பாட்டுக்கமைவாக, அமைப்பின் பிரதிநிதிகளான எம்.தவராஜ், வீ.வாணிகரன் ஆகியோரின் ஏற்பாட்டுக்கமைவாக மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிவோரின் பங்களிப்பில் பெறப்பட்டது.

பாடசாலை மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்காக அண்மையில் நடைபெற்ற செயற்றிட்டங்களை பார்க்கும்போது இப் பாடசாலையின் அதிபர் அற்பணிப்புடன் செயற்படுவதனை காணக்கூடியதாக உள்ளதென இதன்போது பொற்றோர் கருத்துத் தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.