ஜோதிடம் பார்த்த 19 இந்தியர்கள் உட்பட 27 பேர் கைது

குடி­வ­ரவு குடி­ய­கல்வு  சட்ட விதி முறை­களை மீறிய 27 இந்­தி­யர்கள் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரி­களால் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் உளவு மற்றும் விசா­ரணை பிரி­வி­னரால் இந்த கைதுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. கைது செய்­யப்­பட்ட 27 பேரில் விஞ்­ஞா­ன­மாணி பட்­ட­தாரி ஒரு­வரும் உள்­ள­டங்­கு­வ­தாக அறிய முடி­கின்­றது.

குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் 19 பேர் ஜோதிடம் பார்ப்­ப­வர்­க­ளா­கவும் 8 பேர் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் அல்­லது வர்த்­தக நிலை­யங்­களில் சேவை­யாற்­றி­யோரும் அடங்­கு­வ­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­தினர் தெரி­வித்­தனர்.

குறிப்­பாக வடக்கு, கிழக்கில் இவ்­வாறு இந்­தி­யர்கள் தொடர்ந்து குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தை மீறி வர்த்­தகம் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு தங்­கி­யுள்ள நிலையில் அவர்கள் அனை­வ­ரையும் கைது செய்ய நட­வ­டிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 27 இந்தியர்களையும் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.