வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை தின நிகழ்வு-2017

(அஸ்பாக்)

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்ழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வைத்தியசாலை தினம் ( HOSPITAL DAY CEREMONY – 2017) எனும் மாபெரும் நிகழ்வு  கடந்த 19ம் திகதி சனிக்கிழமை மாலை  6:30 மணியளவில் வைத்தியசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்வைத்தியசாலையில் நேர காலம் பாராது சேவையாற்றிய வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், ஆகியோரும் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டதுடன், அவர்களுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

வைத்தியசாலையின் பணிப்பாளர்  Dr. F P.மதன் அவர்களின் தலைமையில், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்  வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினர், பிரதேச நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வின்  அதிதிகளாக  Dr.L.M. நவரத்னராஜா ( Regional Director of Health Service Batticaloa),  இவ் வைத்தியசாலையின் ஓய்வு பெற்ற முன்னாள்  பணிப்பாளர்  Dr.S. தட்சனாமூர்த்தி, மற்றும் அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளரும், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு பிரதித் தலைவருமாகிய மௌலவி அஷ்ஷெய்க்  MMS. ஹாறூன் (ஸஹ்வி) மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்  ஆகியோரும் கலந்து கொண்டதுடன் நினைவுச்சின்னங்களையும் வழங்கி வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றமை இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.