களுதாவளை குருகுலத்தின் ஸ்தாபகர் நினைவு தினமும் 28வது ஆண்டு விழாவும்

[ ரவிப்ரியா ]
சுமார் 50க்கு மேற்பட்ட சிறுவர்களின் புகலிடமாக  திகளுகின்ற களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தின் ஸ்தாபகர் நினைவு தினமும். 28வது ஆண்டு நிறைவுதின விழாவும் வியாழன்று (17) நடைபெற்றபோது.
அதிதிகள் வரவேற்கப்படுவதையும் ஸ்தாபகர் பொன்னையா சுவாமியின் திரு உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மலர்மாலை சூட்டி, மங்கலவிளக்கேற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகின. மட்டக்களப்பு இராமகிருஷ;ணஷன் தலைவர் சுவாமி பிரபு பிரமானந்தாஜீ மகராஜ் ஆசியுரை வழங்;கியதைத் தொடர்ந்து, ப.குணசேகரன் தலைமை உரையாற்றினார்.

குருகுல மாணவர்களால் குருகுல கீதம் இசைக்கப்பட்டு, அதிதிகளின் உரை சகிதம், குருகுல மாணவர்களின்  வில்லுப்பாட்டு;, நாடகம் என்பவற்றுடன் விசேடமாக பெரியகல்லாறு, செட்டிபாளையம், களுதாவளை மாணவர்களின் சிறந்த நடன நிகழ்வுகளும் இடம்பெற்ற பரிசளிப்பும் இடம்பெற்றது.

பிரதம அதிதியும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் எஸ்.பாஸ்கரன் மற்றும் அதிதிகள் பரிசு வழங்கிவைத்தனர்.

யுத்தகாலத்தில் பொன்னையா சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட திருஞானசம்பந்தர் குருகுலமானது பண்புள்ள இந்து தத்துவங்களை பிரதிபலிக்கின்ற ஒரு புதிய சமூகத்தை உருவாகிக் கொண்டிருக்கின்றது பெருமை தரக் கூடிய விடயம் என்பதை அதிதிகள் தங்கள் உரைகளில் அழுத்திக் கூற தவறவில்லை.