மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்


(சசி)
கிழக்கிலங்கை, மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலய புனராவர்த்தன  மஹா கும்பாபிஷேகமானது 18.08.2017 வெள்ளிக் கிழமை அன்று கிரியைகளுடன் ஆரம்பமாகி நடைபெற்றது. இந் நிகழ்வில் எண்ணெய்க்காப்பு சாற்றும் வைபவம் 19.08.2017 சனிக்கிழமை அன்றும், கும்பாபிஷேகம் 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்வில் புண்ணியாகவாசனம், யாகபூஜை, விஷேட ஹோமங்கள், மஹா பூர்ணாகுதி, அந்தர்ப்பலி, விஷேட பூஜை, வேதஸ்தோத்திர திருமுறை பாராயணம், கும்பங்கள் புறப்பாடு, குறித்த முகூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேகம், தசதர்சனம், மஹா அபிஷேகம்,  குருமார் சம்பாசனை, பிரசாதம் வழங்கல் போன்றவை இடம்பெற்றன.

இக் கும்பாபிஷேக  நிகழ்வினை சிவஸ்ரீ கணேச சோதிநாதக் குருக்கள், சிவஸ்ரீ கருணாகரக் குருக்கள், சிவஸ்ரீ நாராயண சண்முகதாஸ் குருக்கள், சிவஸ்ரீ சண்முக வசந்தன் குருக்கள், சிவஸ்ரீ உதயகுமார் குருக்கள், சிவஸ்ரீ பத்மநிலோஜசர்மா, சிவஸ்ரீ சதிஸ்கரசர்மா, சிவஸ்ரீ இளங்கோசர்மா, சிவஸ்ரீ நிறோசன்சர்மா, ஆகியோர் நடத்தி வைத்தனர்.

இதன் முக்கிய அம்சமாக ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வல்லிபுரம் குருக்கள் அவர்களுக்கு ஆலய நிருவாகத்தினர் சேவைக்காலத்தைப் பாரட்டி ஞாபகச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலய தலைவர் துவாகரன் அவர்கள் தனது உரையில் இந் நிகழ்விற்கு உதவிகளை வழங்கி முன்னின்று உழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன். நிருவாகத்தினர் சார்பில் அவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.