சிறுபோகச் செய்கை வெற்றியளித்ததையிட்டு உன்னிச்சை விவசாயிகளால் இயற்கை தெய்வத்திற்கு நன்றிகூறி வழிபாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபோகச் செய்கையிலீடுபட்ட விவசாயிகள்  எதிர்பார்க்கப்பட்ட   நெல் விளைச்சல் வெற்றியளித்ததையிட்டு இயற்கைக்கு தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வழிபாட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை பகல் (11ஆம் திகதி) உன்னிச்சை குளக்கரையில் நடைபெற்றது.


உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், நீர்பாசனத் திணைக்கள பொறியியலாளர் எஸ்.நிரோஜன் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இவ் வருடம் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக விவசாயச் செய்கை இப் பிரதேச விவசாயிகளுக்க நஸ்டத்தை ஏற்படுத்தாவண்ணம் வெற்றியளித்துள்ளதால், இதற்காக இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இப் பிரதேசத்திலுள்ள 11 விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இவ் விழாவினை மேற்கொண்டுள்ளோம். என உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.