பொலித்தீனுக்கு மாற்றீடாக ரெஜிபோர்ம் பெட்டிகளை பாவனைக்கு விட தீர்மானம்

பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட உள்ள நிலையில், அதற்கு மாற்றாக ரெஜிபோர்ம் பெட்டிகளை பாவனைக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த திட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறைக்கு அமைய செயல்படாதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிகார சபையின் குப்பை கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குனர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் நாளாந்தம் 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான குப்பைகள் சேகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த குப்பையில் அதிகமான அளவு பொலித்தீன் பாவனைப்பொருட்களே அதிகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.