உலகின் மிக பெரிய விபுலாநந்தர் சிலை பிரதேச சபையிடம் சனியன்று கையளிப்பு


(சா.நடனசபேசன்)

முத்தமிழ் வித்தகர் ஶ்ரீமத் சுவாமி விபுலாநந்தரின் 125 ஆவது ஜனன வருட நிகழ்வாக புஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் காரைதீவு விபுலாந்த சதுக்கத்தில் நிறுவப்பட்ட உலகின் மிக பெரிய விபுலாந்தர் சிலை உத்தியோகபூர்வமாக பிரதேச சபையிடம் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கையளிக்கப்படுகின்றது.
 
அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்இ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா விழாவுக்கு தலைமை தாங்குகின்றார். பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனும்இ  ஆத்மீக அதிதியாக ஶ்ரீமத் சுவாமி பிரபு பிரேமாநந்தஜிகளும்இ கௌரவ அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணமும் கலந்து கொள்கின்றனர்.
 
விழாவில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவி இராசையா நிவேதிகா வரவேற்பு நடனம் ஆடுவார். கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும். அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் அறிஞர்கள்இ ஊடகவியலாளர்கள்இ சிலையை வடிவமைத்து கொடுத்த கலைஞர்கள் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்படுவார்கள்.
 
இச்சிலை 12 அடி உயரம் உடையது. உலகின் மிக பெரிய விபுலாந்தர் சிலையான இதை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்கின்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. இதே நேரம் சிற்பங்கள்இ சிலைகள் ஆகியவற்றை செதுக்குகின்ற வேலைகளுக்கு இந்திய கலைஞர்களையே நம்மவர்கள் நம்பி வரவழைக்கின்ற நிலையில் நம் நாட்டவர்களை அதுவும் கிழக்கு மாகாண கலைஞர்களை கொண்டு இச்சிலை மிக அழகாகவும்இ நேர்த்தியாகவும்இ கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.