தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலகத்தில் விழிப்புணர்வுச் செயலமர்வு


(சா.நடனசபேசன்)
கிராம மட்டத்தில் சிறுவர்பாதுகாப்பு நிகழ்வுகளை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு  விழிப்பூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வுச் செயலமர்வு வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடிப் பிரதேசசெயலகத்தில் நடைபெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரி.தயாளன் அவர்களின்  ஒழுங்கமைப்பில் பிரதேசசெயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேசசெயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் ,கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர்  ஜீ.ருத்திரகணேசன் ,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.எம். புவிராஜ் ,முகாமைத்துவப் பணிப்பாளர் வரதராஜன்மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
 இச் செயலமர்வின் வளவாளராக தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபையின் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் ஏ.பிரபாகர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.