வாழைச்சேனையில் இரண்டாயிரம் கிலோ சுறாமீன்கள்!


வாழைச்சேனையில் ஆழ் கடல் மீன் பிடி படகு உரிமையாளர்  ஒருவருக்கு 2 ஆயிரம் கிலோவிற்கு அதிகமான சுறாமீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீன் பிடிக்காக தொழிலுக்காக கடலுக்கு சென்று சில நாட்கள் கடலில் தங்கியிருந்து  தமது தொழிலை முடித்து விட்டு இன்று (19)  வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை  வந்தடைந்த மீன்பிடி படகு உரிமையாளருக்கே இரண்டாயிரம் கிலோ கிராமிற்கும்  (2000kg) அதிகமான சுறாமீன்களும் மற்றும் ஒரு தொகை சிறு மீன்களும் பிடிபட்டிருந்தது.

மேலும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக ஏல விற்பனை மண்டபத்தில் காணப்பட்ட இன்றைய விலை நிலைமையின் படி அந்த சுறாமீன்களின் பெறுமதி கிட்டத்தட்ட பத்து(10) இலட்சம் என தெரிவிக்கப்படுகிறது.

 லத்தீப் எனப்படும் படகு உரிமையாளருக்கே இந்த மீன்கள் கிடைத்துள்ளதாக  தெரியவருகிறது.