துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் பெண்களால் நடைமுறைப்படுத்தும் புதிய தொழிற்சந்தை


(சா.நடனசபேசன் க.விஜயரெத்தினம்)
களுவாஞ்சிக்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் பெண்களால் நடைமுறைப்படுத்தும் புதிய தொழிற்சந்தை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
துறைநீலவணை தெற்கு 1 தெற்கு வடக்கு  ஆகிய சுய உதவிக்குழுக்கள் இணைந்து  இச்சந்தையினை நடாத்தியது.
 இந்த புதிய தொழிற்சந்தையினை பிரதேச பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சேவைநோக்கில் அம்கோர் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

அத்துடன் சுயதொழிலை மேம்படுத்தும் ஒரு செயற்பாடாகவே போட்டி ரீதியிலான இத்தொழிற்சந்தை நடத்தப்படுகிறது.

இதன் போது குழந்தைகளுக்கான வித்தியாசமான கண்கவர் களியாட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது.

 வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மேற்படி பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவில் பெண்களை மையமாக கொண்ட பல குழுக்கள் சிறு சேமிப்புக்களை செய்து அதனை மூலதனமாக கொண்டு மேற்படி சேவை செய்யும் ஸ்தாபனத்தின் உதவியுடன் இணைந்து சுயதொழில் செய்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தி.கிருபைராசா மற்றும் கிராமசேவகர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் உட்கட பலர் கலந்துகொண்டனர்

இத்தொழிற்சந்தை தொடர்ந்து நாளையும் நடைபெற  உள்ளதும் குறிப்பிடத்தக்கது.