நாடுதழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ் சேவை

இந்திய அம்பியுலன்ஸ் சேவை அடுத்த வருடம் முதல் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுமென்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளுக்கு முதன் முறையாக உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போது அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.


இதுதொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் சேவையில் ஈடுபட்டுள்ள அம்பியுலன்ஸ்களின் எண்ணிக்கை 88 ஆகும். மேலும் 250 அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட இருப்பதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 இதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.  இதற்கு மேலதிகமாக விமானம் மற்றும் தரைமார்க்கமாக அனர்த்தங்களின் போதும் சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இதற்காக 24 ஹெலிக்கொப்டர்களும் 1025 அம்பியுலன்ஸ் வண்டிகளும், அனர்த்தங்களின் போது செயற்படக்கூடிய 24 வாகனங்களையும் ஜேர்மனியின் ஸ்ரெய்கர் அமைப்பின் அவசர விபத்துச் சேவை வழங்குவதற்கு உறுதி தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.