பாடசாலை நோக்கி நகர்ந்து வலம்வரும் 'ஆரொடு நோகேன்' நாடகம்


குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்டு நுண்கலைத்துறையின் தலைவரும் முதுநிலை விரிவுரையாளருமான திரு.சு.சந்திரகுமார் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்ட 'ஆரொடு நோகேன்' எனும் யதார்த்த நாடகம் மட் /ககு/சந்திவெளி சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர் ஆசிரியர்கள் பார்ப்போராகக் கலந்துகொண்டு பிராமண்டமாக 28.09.2017 மேடையேற்றப்பட்ட இந்நாடகம் அடுத்த கட்டமாக மட் / கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் 08.10.2017 அன்று அவ்வலயத்தில் உள்ள மாணவர்களின் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்தும் நோக்கில் 5வது தடவையாக மேடையேற்றப்பட்டது. இதனை மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் அவர்களும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.ஹரிகரராஜ் அவர்களும் ஆசிரிய ஆலோசகர் க.பரமானந்தம் அவர்களின் துணையுடன் ஒழுங்குபடுத்தி இருந்தனர். கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி திரு.மு.ரவி அவர்கள் முழு ஒத்துழைப்பையும் அனுமதியையும் வழங்கியிருந்தார். நுண்கலைத்துறையின் தலைவர் திரு.சு.சந்திரகுமார் இதனை இணைப்பாக்கம் செய்து செயற்படுத்தினார்.

இக்கல்வி வலயத்தில் தரம் 10, 11 இல் நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் பார்த்து மகிழ்ததோடு, தாம் கற்ற கோட்பாட்டறிவுடன் இணைத்து மனதில் பதித்துக் கொண்டனர். பரீட்சையை இலகுபடுத்த இவ்வாற்றுகை பெரும் துணை புரித்தது. நாடக நெறியாள்கை நடிப்பு, தயாரிப்பு, உடை, ஒப்பனை, இசை, நடனம், காட்சி என்பவற்றின் தனித்துவத்தைக் கண்டு அகமழ்ந்து ஆற்றுகை செய்தமைக்கு நன்றி கூறினர். அனைத்து வெளிப்பாட்டுடனும் கூடிய நல்ல நாடகத்தை முதன் முதல் பார்த்து மகிழ்ந்ததாகவும் இவ்வாறு பார்ப்பது மனதில் பதித்திருப்பதாகவும்  கூறினர்.

வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் இது பற்றிக் கூறுகையில் 'இந்த நாடகம் மிகவும் காத்திரமாக இருந்தது. நாடகத்தின் ஒவ்வொரு விடயமும் அருமை. பார்த்துக் கொண்டு இருக்கணும் போல் இருந்தது. இதனை நெறியாள்கை செய்து எமது வலய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுடைய வகையில் ஆற்றுகை செய்த முதுநிலை விரிவுரையாளர் திரு.சு.சந்திரகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்' என்றார்.

பிரதிக்கல்விப் பணிப்பாளர் இது பற்றிக் கூறும்போது 'இந்நாடக மேடையேற்றம் எந்த விதத்திலும் குறை கூறுவதற்கு இல்லை. ஒரு நடிகரின் நடிப்பின் தரத்தைப் பார்த்துக் கொண்டு அதன் ஆழத்தில் இருந்கும்போது அடுத்த பாத்தரம் அதனை இன்னுமொரு தளத்திற்குக் கொணர்த்தது. அதன்பின்னர் மற்றைய பாத்திரம் இதனை மேலும் வலுப்படுத்தியது என்றார். இதனை ஷீலா, சறோஜினி, அம்பிகை எனும் பாத்திரங்கள் தந்ததாகக் கூறினார்' மேலும் அவர் கூறும்போது இதiனை நெறியாள்கை செய்த முதுநிலை விரிவுரையாளர் சந்திரகுமாரின் திறன், ஆளுமை வெளிப்பாடுகளையும் இந்நாடகம் காட்டுகின்றது என்றும் அனைத்து மேடை நுட்பங்களையும் கொண்ட நல்ல ஆற்றுகை என்றும் குறிப்பிட்டார்.

மாணவர் ஒருவர் இது பற்றிக் கூறும்போது 'ஞாயிறு மட்டுமே வீட்டில் ஓய்வாக இருப்பது. இங்கு வந்தால் போறடிக்கும் என்று நினைத்து வந்தேன். கறண் இல்லை. ஆனால் நாடகம் செமையாகவும் சட்டப்படியும் இருந்தது. நேரம் போனதே தெரியல்ல. இதன் இசை என் உள்ளத்தைத் தொட்டது. நெறியாளர் சந்திரகுமார் சேகருக்கு நன்றிகள்' என்றார். முதன் முதல் இவ்வாறான நாடகத்தை இன்றுதான் பார்த்;தேன். எனக் கூறப்பட்டது. பல்கலைக்கழகத்தின் சமூக நலனுக்கான இவ்வாறான வேலைகள் சமூக வலுவூட்டலுக்கு மிகவும் அவசியமானது என்பதைக் காட்டியது.

பிரதான நடிகர்கள்
ரஞ்சித்குமார் - ரா.தனஞ்செயன்,
சுபத்திரா - த.நவராணி
ஷங்கரி - தி.பிரதீபா
ராஜ்குமார் - அ.சந்திரகுமார்
செல்வராணி - கு.கனிஸ்ரா
ரஜீவ் - வி.கிருபானந்தம்
ஷீலா - ஜீ.விலோஜினி
இராசதுரை - வே.லோகுஜன்
சறோஜினி - சோ.ஞானசக்தி
ஆரணி - ச.அனுஜா
அம்பிகை - ந.தர்சினி
கோரஸ் குழு
சி.கிரிஜா, ச.பிலிசியா, வி.விக்கினேஸ்வரன், பே.நிதாகர், வி.சசிகரன், கோ.மயூரி, பே.நிசாந்தினி
இசை - ஆ.ரேணுஜன்
குரலிசை - இ.பிரியா, இ.இலட்சுமிப்பிரியா, செ.வாரணன்
தோல் வாத்தியம் -நூ.அ.நிப்றாஸ்
ஒளியமைப்பு - கி.திருச்செந்தூரன்.
ஒப்பனை - ச.அனுஜா, ஜி.கபிலாசினி
மேடை முகாமை மற்றும் காட்சியமைப்பு - வி.சசிகரன், வி.விக்னேஸ்வரன்
நடனம் - சி.கிரிஜா
நெறியாளர் -திரு சு.சந்திரகுமார்