மண்டூர் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(வரதன்)
நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களின் நன்மை கருதி பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகிறது போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டூர்க் கிராமத்தின் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இலங்கைக் ஜனநாயக சோசலிச குடியரசின்  ஜனாதிபதி பிரதமர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் S.கணேசமூர்த்தி  தலைமையில் இன்று  இடம்பெற்றது.

இப்பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கு 1400 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் இப்பணிகள் 3 வருடங்களுக்குள் நிறைவடையயுள்ளது.இப்பாலமானது குருமண்வெளிக் கிராமத்தையும் மண்டூர்க் கிராமத்தையும் இணைக்கும் ஒரு பாலமாகும் இதுவரை காலமும் இப்பகுதியில் வாழும் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்தனர்.இப் பாலத்தைக் கடக்க பாதையையும் தோணிகளையும் பயன்படுத்தி வந்தனர். வெள்ள காலங்களிலும் அடைமழை காலங்களிலும் நீர் மட்டம் அதிகரிப்பதனால் பல உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

 
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக இலங்கை பாராளமன்றத் தலைவரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.இந் நிகழ்வில் பிரதியமைச்சர் .அமிரலி பாராளமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் அரச உயர் அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.