அரச ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படும்: வஜிர அபேவர்தன

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளங்கள் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் 23600 ரூபா வரையில் உயர்த்தப்படும் என்றும் சட்ட மா அதிபரின் சம்பளம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரையிலும், மருத்துவர்களின் அடிப்படைச் சம்பளம் 60000 ரூபாவிலிருந்து 69756 ரூபாவாகவும் உயர்த்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காக ஆண்டொன்றுக்கு 12 பில்லியன் ரூபா மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.