சிவாச்சாரிய குருப்பட்டம்பெற்றகுரு உ.ஜெயதீஸ்வர ஜயாஅவர்களை வரவேற்பு நிகழ்வு

(வரதன்)
சிரஞ்சீவி ஸ்ரீலஸ்ரீ உ.ஜெயதீஸ்வர ஜயா (மட்-கச்சேரி சித்தி விநாயகர் அமிர்தகழி மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் வலையிறவு மாணிக்கப் விநாயகர் ஆலயம்) கள்ளியங்காடு ஆஞ்சநேயர் போன்ற ஆலயங்களில் பூஜையினை நடாத்திவரும் ஜயா அவர்களுக்கு திருவருளோடும் குருவருளோடும் உரும்பிராய் சிவதர்மசாஸ்த்தா ஜயப்பன் ஆலயத்தில் சமய தீட்சை நிர்வாண தீட்சை  9.11.2017 அன்று இடம்பெற்று சிவாச்சாரிய  குருப்பட்டமளித்தல் நிகழ்வு இடம்பெற்றது.


இவருக்கான குருப்பட்டமளித்தல் நிகழ்வினை உரும்பிராய் ஆலயத்தில் குரு சிவஞான பாஸ்கரன் பிரம்மஸ்ரீ தாணு வாசுதேவ சிவாச்சாரியார் நடாத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து மட்-ஆஞ்சநேயர் ஆலயத்தில் நேற்றுமாலை குரு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.ஸ்ரீலஸ்ரீ ஜெயதீஸ்வர ஜயா ஸ்ரீலஸ்ரீ உத்தம குமார குருக்கள் சௌதலாதேவி தம்பதியினரின் 2 வது புத்திரனும் பல் சமய ஒன்றிய இந்துமத குருவுமாவார்.