மாணவர்களது கல்வி முன்னேற்றத்தில் சமூகத்தின் பங்களிப்பு?


இன்று கல்வி நிறுவன ரீதியான காணப்பட்டிருந்தாலும் அந்தக்கல்வியின் மீது சமூகத்தின் பார்வையும், அக்கறையும் அதிகமாகக் காணப்;படுகின்றமை யாவரும் அறிந்த விடயமே. குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு அலகாகும். எனவே ஒவ்வொரு மாணவர்களின் மத்தியிலும் தமது குடும்பம், பின்புலம், பரம்பரை பாரிய தாக்கத்தினை செலுத்துகின்றது. இருந்தாலும் அந்தப் பார்வையானது சகல பிரதேசங்களிலும் காணப்படுகின்றதா என்பது கோள்விக்குறியாகும். ஏனெனில் பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற மாணவர்களில் அதிகமானோர் பெற்றோர்களாலும், அந்தச் சமூகத்தினாலும் கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவர்களது அடைவுகளிலிருந்து இதனைக் காணக்கூடியதாக உள்ளது. அண்மையில் ஒரு அதிபர் கருத்துரைக்கையில் தன்னுடைய பாடசாலை மாணவர்கள் கல்வியில் பின்தங்கிக் காணப்படுகின்றனர்.

இன்றைய சமூகம் விரைவில் மாற்றம் பெற்று வருகின்றது. கல்வியினால் வாழ்க்கை முறைகள் செயற்பாடுகள் ஆகியன குறுகிய கால இடைவெளியில் மாறிவிடுகின்றன. நாம் கற்றவற்றில் சில விடயங்கள் சில வருடங்களின் பின்னர் எமது வாழ்க்கைக்குப் பயன்படாது போகும் அளவிற்கு சமூகம் மாறிக்கொண்டிருக்கின்றது. இதற்காக மாறிவரும் விஞ்ஞான உலகிற்கு ஏற்ப பொருத்தமான கல்வியைத் தொடர்ந்து மாணவர்கள் கற்கவேண்டி இருக்கின்றது. இதனால் கல்வி சமூக மாற்றத்துக்குள்ளாகின்றது. இதனால் அவர்களது சமூக வாழ்க்கை முறையும் மாற்றமடைகின்றது. புதிய சூழல்,  புதிய வேலை, புதியவர்களின் தொடர்பு, புதிய வாழ்க்கை போன்றவை இம்மாற்றத்திற்கு காரணமாக அமைகின்றன.

இவர்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகின்றபோது அந்த மாணவர்களை கற்றலில்பால் கொண்டு செல்ல முடியும். அந்த விழிப்புணர்வுகளில் அனைவரையும் பங்குப்பற்றச்செயவதுடன், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் அதன் பலாபலன்கள் பற்றியும் கூறுவதுடன் இவர்களது குழந்தைகள் தொடர்ச்சியாக கற்பதற்கான அனைத்து வசதிகளும் அப்பாடசாலையால் வழங்கப்படுதல் வேண்டும் என்றும் கூறினார்;
உண்மையில் பாடசாலைக்குள் பிள்ளையை தரம் ஒன்றில் சேர்த்துவிட்டால் பெற்றோர்கள் பிள்ளையைக் கவனிப்பதே இல்லை. சிலவேளைகளில் தன்னுடைய மகன் எத்தனையாம் வகுப்பில் படிக்கிறான் என்று நண்பர்கள் யாராவது கேட்டால் சரியாக கூறமுடியாது திணறுகின்ற பெற்றோர்களும் எம்மத்தியில் உள்ளனர். இவ்வாறாக காணப்படுகின்ற பெற்றோர்கள் வாழ்கின்ற சமூகத்தில் காணப்படும் பாடசாலையின் நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள். அந்தக் கல்வியின் ஊடாக நாம் எதிர்ப்பார்க்கின்ற, சமூகம் எதிர்ப்பார்க்கின்ற, நாடு எதிர்ப்பார்க்கின்ற முன்னேற்றத்தைக் காண முடியுமா?

கல்வி மனிதனின் கண்களுக்கு நிகரானது, அதனால்தான் அறிவுள்ளவர்களையும் அறிவற்றவர்களையும் அறிஞர்கள் பார்வை உள்ளவர்களையும் பார்வை அற்றவர்களையும் போல ஒப்பிடுகின்றனர். இது கல்வியின் முக்கியத்துவம் பற்றி கூறுகின்ற ஒரு வாசகமாகும். பொதுவாக நாம் வாழும் சமூகத்தில் கல்வி மேம்பாட்டுக்கான முயற்சிகள் பல்வேறு தரப்பாலும் அர்ப்பணிப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை நாம் எல்லோரும் அறிந்து வைத்திருந்தாலும் சிலர் சிலவேளைகளில் கவனிப்பாராற்று இருப்பதையும் காண்கின்றோம். அதிபர் கூறுவார் இவன அது தந்தை ஒரு அரச ஊழியர் ஆனால் பாடசாலைக்கு வரவேமாட்டார்.

பிள்ளையின் அடைவு சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றி பேசுவதந்கு அழைத்தால் அவர் வருவதில்லை என்று கோபப்படுகின்ற அதிபர்களும் உண்டு. சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைக்கு ஒன்று என்று சொல்லக் கேள்விப்பட்டாலே போதும் ஓடோடி பாடசாலைக்கு வந்து அதிபர், ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடி, பிள்ளையின் நடத்தை, கற்றல்; விடயங்கள், வகுப்பறைச் செயற்பாடுகள், அடைவு மட்டம், மதிப்பீட்டுப் புள்ளிகள் போன்ற பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டு செல்வர். அந்தக் குழந்தையின் செயற்பாடுகளை இருதரப்பிலும் அவதானிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் நிறைவாக உள்ளதால் முன்னேற்றத்தினை நோக்கி நகர்வர்.
இதற்காகவே பாடசாலைகள் சமூகமயப்படுத்தப்படுதல் வேண்டுமெனக் கூறப்படுகின்றது. அதற்கான முன்னோடியாக புதிய பாடசாலை அபிவிருத்தி சபை நிறுவப்பட்டு அந்தச்; சமூகத்தின் பங்களிப்போடு பாடசாலையையும் அங்கி பயில்கின்ற மாணவர்களினது கல்வியிலும் கவனம் செலுத்துகின்ற சபையாக உருவெடுத்துள்ளதை கூறலாம். அந்த வகையில் நமது மாணவர்கள் பாடசாலையில் கற்கின்ற கல்வி அடைவினில் சிலவேளைகளில் தேக்க நிலையும் ஏற்படுகின்றது.

பொதுவாக இந்தத் தேக்கமானது ஆரம்பக்கல்வியில் காணப்படுமாக இருந்தால் மேல் வகுப்புக்குச் செல்லும்போது ஒரு பாரிய சுமையாக அந்;தப் பிள்ளையுள் காணப்படும். சிலவேளைகளில் இதன் விளைவு அவன் முழுமையான கற்றலை மேற்கொள்வதவனாக மாறுகின்றான். அவன் சமூகத்தில் எதிரியாகவும் மாறுகின்றான். இது ஒரு முக்கிய விடயமாகும். எனவேதான் எமது சிறார்களுக்கு வழங்கப்படுகின்றற ஆரம்பக்கல்வியில் நமது சமூகம் அதிக கரிசனை கொண்டு பார்க்கப்பட வேண்டி உள்ளது. அவ்வாறு பார்க்கப்படாதபோது அதுவும் சமூக மட்டத்திலான ஏற்றத்தாழ்வினை கொண்டுவரும்.

பொதுவாக பாடசாலைகளில் ஆரம்ப கல்வியூட்டுதலில் கரிசனையோடு செயற்படுவதுபோல் ஒரு தோற்றப்பாடு எமக்கு தெரிந்தாலும் ஒட்டுமொத்த சமூக அளவில் அது நிகழவில்லை என்பதை நாம் வாழுகின்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற பாடசாலை தரவுகள் நிரூபிக்கின்றன. ஏனெனில் கவனிப்பாரற்றிருக்கும் கணிசமானளவு சிறார்கள் தெருக்களிலும் தொழில்துறைகளிலும் காணப்படுகின்றனர். அண்மையில் ஒரு அதிபர் கூறுகின்றபோது மிகவும் மனவேதனையுடன் தெரிவித்த விடயமிது. லீவு நாட்களில் க.பொ.த. சாதாரணதர வகுப்பு மாணவர்களுக்கான விசேட வகுப்புகளை நடாத்தும் நோக்குடன் பாடசாலைக்கு அழைத்தபோது அவ்வாறு பார்க்கப்படாதபோது அதுவும் சமூக மட்டத்திலான ஏற்றத்தாழ்வினை கொண்டுவரும்.

பொதுவாக பாடசாலைகளில் ஆரம்ப கல்வியூட்டுதலில் கரிசனையோடு செயற்படுவதுபோல் ஒரு தோற்றப்பாடு எமக்கு தெரிந்தாலும் ஒட்டுமொத்த சமூக அளவில் அது நிகழவில்லை என்பதை நாம் வாழுகின்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற பாடசாலை தரவுகள் நிரூபிக்கின்றன. ஏனெனில் கவனிப்பாரற்றிருக்கும் கணிசமானளவு சிறார்கள் தெருக்களிலும் தொழில்துறைகளிலும் காணப்படுகின்றனர். அண்மையில் ஒரு அதிபர் கூறுகின்றபோது மிகவும் மனவேதனையுடன் தெரிவித்த விடயமிது. லீவு நாட்களில் க.பொ.த. சாதாரணதர வகுப்பு மாணவர்களுக்கான விசேட வகுப்புகளை நடாத்தும் நோக்குடன் பாடசாலைக்கு அழைத்தபோது குறித்த ஒருசில மாணவர்களே வருகை தருகின்றனர். இவர்களுக்காக கஸ்டப்பட்டு ஆசிரியர்களை கொண்டுவந்தால் அவர்கள் சிறு சிறு தொழித்துறைகளில் ஈடுபடுவதாகக் கூறினார். இவர்களது  பெற்றோர்களுக்கு இதுவிடயமாக எடுத்துக்கூற அழைத்தபோத பாடசாலைப் பக்கம் எட்டியும் பார்க்காமல் தானுன்டு தன்வேலை எனக்கூறி பாடசாலைக்கு வருவதே இல்லை. இதுவும் கல்விச் சமூகத்தில் ஆராயப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

இவ்வாறான மாணவர்களைப் பெருமளவில்; கொண்டுள்ள பாடசாலைகளாக வகை மூன்றினை சேர்ந்த சிறிய பாடசாலைகளைக் கூறலாம். அதுமட்டுமல்லாமல் இவ்வாறாக அந்தப் பிரதேசத்தின் சுற்றுப் புறங்களில்தான் இப்பாடசாலைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்க்ள பற்றியும் இந்த மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் பற்றியும் இவர்களுக்கு எவ்வகையிலான உதவிகளை மேற்கொள்ள முடியும் என்பதையும் சமூகத்தினர் சிந்திக்க வேண்டியும் உள்ளது.

பொதுவாக இவ்வகைப்பாடசாலைகளில் பௌதீக வளப்பற்றாக்குறை என்பது ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றமை முக்கியமாகும். அதனை ஓரளவாவது தீர்த்துக்கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் சமூகத்தில் காணப்படுதல் வேண்டும். மேலும் ஆசிரியர் பற்றாக்குறை பெரியளவில் காணப்படுவதில்;லை. அதேவேளை இப்பாடசாலைகளிலேயே குறைந்த வருகை வீதமும் ஆரம்பக்கல்வி வகுப்புடன் முழுமைபெற்று பாடசாலையிலிருந்து இடைவிலகிக் கொள்வதும் குறைவான பெறுபேற்றினை பெற்றுக்கொள்வதும் இப்பாடசாலைகளிலே காணப்படுகின்றது. இப்பாடசாலைகளில் காணப்படுகின்ற மற்றுமொரு குறைப்பாடாக நாம் காணக்கூடியது மாணவர்களுக்கான கல்வி போதனைகளும் வழிகாட்டுதல்களும் ஊக்கமளிப்புக்களும் சரியாக வழங்கப்படுவதில்லை என்கிற குறைபாடும் உண்டு. இங்கு சுமார் 50 தொடக்கம் 250 வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவற்றில் ஒரு சில ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர். இவற்றில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் கடமையாற்றும் பாடசாலைகளும் உண்டு. இருப்பினும் குறைவான மாணவர்கள் ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்களின் அடைவில் குறைபாடு ஏற்படுகின்றது.

இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள். எனவேதான் மிகக்கவனமாக நெறிப்படுத்தி பயற்றுவித்தல் தேவைப்படுகின்ற இந்த சிறார்களுக்கு வெறும் கடமைக்கு கற்பிக்கின்ற அல்லது பொடுப்போக்காக கற்பிக்கின்ற செயற்பாடுகள் சிறந்த பெறுபேற்றினை பெற்றிருந்தது. எனவே இந்த விடயத்தில் திட்டமிட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகள் கல்வி நிர்வாக மட்டத்திலும், சமூக மட்டத்திலும் மற்றும் தனிப்பட்ட ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகளில் முதலாவதாக இவ்வாறான குறைபாடு எமது சிறிய பாடசாலைகளில் நீண்ட நெடுங்காலமாக உணரப்படாமல் உள்ளது என்பதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அத்தோடு இவ்வாறான பாடசாலைகளுக்கு நியமிக்கப்படும் மற்றும் நியமிக்கப்படவிருக்கும் ஆசிரியர்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இதிலுள்ள மற்றொரு பாரிய குறைபாடாக கூறப்படுவது இவ்வகைப் பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுப்பும் பெற்றோர்கள் இந்த விடயங்களை புரியாதவர்களாகவும் அதில் கவனம் செலுத்தாதவர்களாகவுமே உள்ளனர். எனவேதான் இந்த விடயங்களிலும் சமூக ஆர்வலர்களே அதிக கவனம் செலுத்த வேண்டும். இங்கு தரம் ஐந்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் இப்பாடசாலைகளிலிருந்து சித்தி அடையும் மாணவர்களின் எண்ணிக்கையினை அளவுகோலாக கொண்டு புதிய மாணவர்களை அதிகளவில் உள்வாங்குகின்ற ஒரு பாடசாலையாக மாற்ற முயற்சிக்கலாம். அத்தோடு கல்வி கற்பிப்பதில், பாடங்களைப் போதிப்பதற்கு சமமாகவே மாணவர்களுக்கு நல்ல விடயங்களில் ஆர்வமூட்டுவதும் இலட்சிய கனவுள்ளவர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளும் கல்வியின் உயரிய நோக்கை அடைந்து கொள்வதிலும் அச்சமூகம் ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.

எமது முன்னோர்கள் எமது சமூகத்திலுள்ள பெரியவர்கள், கற்றவர்கள் மற்றும் கல்வியில் சாதனை நிகழ்த்திய பலரது சம்பவங்களையும் வறுமையிருந்தும் வாழ்வில் முன்னேற்றமடைந்து சாதனை நிகழ்த்தியவர்களையும் மாணவர்களுக்கு புகட்ட வேண்டும். வாழ்வியலின் நடைமுறை அம்சங்களை உண்மையான தத்துவங்களையும் ஊட்டுவதன் மூலம் அவர்களது கற்றலின் மேம்பாட்டினை அதிகரிக்கச் செய்யலாம். இதனையும் மாணவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இது சமூக சிந்தனையுடன் பார்க்க வேண்டியும் உள்ளது. எனவேதான் இந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் இம்மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த மாணவர்களின்  கல்வி வளர்ச்சியில் தனிப்பட்ட ரீதியில் எவ்வாறான பங்களிப்பினை நாம் செய்யமுடியும் என்பதையும் அச் சமூகத்திலுள்ளோர் சிந்;திக்க வேண்டும். அண்மையில் ஒரு பாடசாலையில் உயர்தர மாணவர்களது தின நிகழ்வு நடைபெற்றது. அங்கு அழைக்கப்பட்ட விசேட அதிதிகள் அப்பாடசாலையில் கல்வி பயின்று உயர் தொழில் புரிகின்றவர்கள். அவர்கள் பாடசாலையின் தோற்றப்பாட்டினை கண்ணுற்று தமது சொந்தப் பணத்திலிருந்து பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள உதவின. இதுபோன்று இவ்வகையான பாடசாலைகளிலிருந்து உயர்தவர்களை அழைத்து அவர்கள் ஊடாக பாடசாலைகளின் நோக்கை அடைந்து கொள்ள ஏதுவான காரியங்களை மேற்கொள்வது சமூகபார்வையாக அமையுமல்லவா.

இங்கு வழிகாட்டுதலும், ஊக்கப்படுத்தலும் மிகத்தேவையாக இருக்கின்றன. அதற்காக நாம் அன்றாட நடவடிக்கைகளில் அடிக்கடி பாடசாலைக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் கொஞ்ச நேரத்தை செலவிடுவதன் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்தவும் வழிகாட்டவும் முடியும். அத்துடன் நாம் நமக்குத் தெரிந்த பரோபகாரிகள் ஊடாகவும் அபிவிருத்திகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்;றலுக்கு துணைபுரிவதன் மூலம் அந்தப் பாடசாலையும் சமூகத்தில் பேசப்படுவதற்கு வழி ஏற்படுத்துதல் முக்கியமாகும். அது மட்டுமல்லாமல் பெரியவர்களது வருகையானது அந்தப் பாடசாலையின் மாணவர்களுக்கு புது உற்சாகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அத்தோடு அங்கு கடமையாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தையும் வழங்கும் என்கின்ற உணர்வினையும் கொடுக்கும். மேலும் அந்த மாணவர்களின் கல்விக்கான செலவுகளை பொறுப்பெடுப்;பதன் மூலம் பெரியதொரு ஆத்ம திருப்தியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒவ்வொரு பாடசாலையிலும் அதிபர், ஆசிரியர் குழாம் சிறந்த தியாக சிந்தனையுடன் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி செயற்படவேண்டும். ஒரு ஆசிரியர் என்பது சிலை வடிக்கும் சிற்பியாகவே கணிக்கப்படுகின்றார். அவர்களால் மாணவர்களை நல்லவனாகவும் கெட்டவனாகவும் வடிக்க முடியும். எனவே சமூகத்தில் எவ்வாறான நிலையில் வாழ, பழக வேண்டும் என்பதை குடும்பம் மட்டுமன்றி பாடசாலையும்  தெளிவுபடுத்த வேண்டும் என்பது கடமையாகும். அதேநேரத்தில் மாணவர்கள் சிறந்த ஒழுக்க விழுமியங்கள் உடையவர்களாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தினை பொருத்தவரை அது துளியும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. பாடசாலை வயதிலேயே முறையற்ற பழக்கவழக்கங்கள், நடத்தைகள், கீழ்படிவு இல்லாத குணம் என்பன செறிந்து காணப்படுகின்றன.
எனவே சமூகத்தின் கண்களாகவுள்ள அறிவுக்கூடங்களாக பாடசாலைகளையும் அங்கு பயிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளையும் சமூகத்தின் தூர நோக்குடன் கூடிய பார்வையினை செலுத்துவதன் ஊடாக அறிவுடையோர் சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமாக இருக்கும். பின்தங்கிய பாடசாலைகள், பின்னடைவாக பாடசாலைகள் என்கிற வேறுபாடுகள் காரணமாக அங்கு கற்பிக்கச் செல்கின்ற ஆசிரியர்கள் பற்றிய குறைவான மதிப்பீடுகளும் சமூகத்தில் மேலோங்கி நிலையில் அனைத்துப் பாடசாலைகளும் நமது சமூகத்தின் சொத்துக்கள் என்கிற எண்ணப்பாட்டுடன் நடந்து கொள்வோமாக இருந்தால் நினைத்தனை சாதிக்க முடியும். அதன் மூலம் நற்பிரஜைகளைத் தோற்றுவித்து சிறந்த நாட்டுபற்றாளர்களையும், புத்தி ஜீவிகளையும், சமூக பற்றார்களையும் பிரசவிக்க முடியும் என்பது திண்ணம்.

சி.அருள்நேசன்
கல்வி, பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.