பொலிஸ் காவலிலிருக்கும் நபரை அணுக சட்டத்தரணிக்கு உரிமை

பொலிஸ் தடுப்பிலுள்ள சந்தேக நபரொருவரை அவரது சட்டத்தரணி அணுகுவதற்கும், அவரைத் தடுத்துவைத்துள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து சட்டத்தரணி தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அதிகாரமளிக்கும் சட்ட திருத்தத்தை அரசு கொண்டுவருகிறது.

குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையில் சிறப்பு ஏற்பாடாக கொண்டுவருவதற்கன சட்டவரைவை நீதி அமைச்சர் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார்.

பொலிஸ் தடுப்பிலுள்ள சந்தேக நபரொருவரை அவரது சட்டத்தரணி அணுகுவதற்கும், அவரைத் தடுத்துவைத்துள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து சட்டத்தரணி தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அதிகாரமளிக்கும் சட்ட திருத்தத்தை அரசு கொண்டுவருகிறது.



குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையில் சிறப்பு ஏற்பாடாக கொண்டுவருவதற்கன சட்டவரைவை நீதி அமைச்சர் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார்.

1- சந்தேகநபரால் புரியப்பட்ட தவறு.

02- சந்தேகநபர் கைது செய்யப்பட்ட இடம், நேரம், திகதி.

03- சந்தேகநபரை நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய திகதியும் அண்ணளவான நேரமும்.

04- புலன் விசாரணைகளைப் பாதிக்காத நீதி நலன்களுக்கு பாதகமான நிலையை உருவாக்காத வேறெவையேனும் தகவல்களைப் பெறல்.

மேலும் சட்டத்தரணிக்கு உள்ள உரித்துக்களாக,

01- சந்தேகநபர் தடுத்துவைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து சந்தேகநபர் சார்பிலான முறையீட்டை வழங்கல்.

02- 1997ஆம் ஆண்டு 30ஆம் இலக்க பிணைச் சட்டத்தின் 6ஆம் பிரிவுக்கு அமைவாக சந்தேகநபருக்கு பிணையளிப்பதற்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விண்ணப்பம் வழங்கல்.

03- ஆயுதங்கள், ஆபத்தான பொருள்களை அடையாளங் காண்பதற்காக சந்தேகநபர் வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தால் அல்லது பிடியாணையின்றி கைது, சந்தேகநபரிடம் விசாரணை இடம்பெறும் போது சட்டத்தரணி அணுகுவது தாமதமாகலாம். எனினும் சட்டத்தின் ஏற்பட்டால் பொலிஸில் தடுப்பிலுள்ள சந்தேகநபர் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தவேண்டும் என்ற நேரம் முடிவுறுவதற்குள் சந்தேகநபரை அணுக சட்டத்தரணிக்கு அனுமதியளித்தல் வேண்டும்.

04- சந்தேகநபரை அவரது சட்டத்தரணி அணுகுவதனை தாமதிக்கும் முடிவை பொலிஸ் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத பொலிஸ் அலுவரே எடுக்க முடியும்.

06- அதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே நடைமுறைப்படுத்த முடியும்.

07- பொலிஸின் கட்டுக்காப்பிலுள்ள ஆளொருவருக்கான அணுக்கத்தைக் கொண்டுள்ள சட்டத்தரணியொருவர் அத்தகைய அணுக்கத்தை பொறுப்பான முறையில் நல்லெண்ணத்துடன் பிரயோகிதல் வேண்டுமென்பதுடன் நியாயமான முறையில் தேவைப்படக்கூடிய காலத்துக்கப்பால் அணுகக் காலப் பகுதியை அவசியமற்ற முறையில் அல்லது நியாயமற்ற முறையில் நீடிக்கலாகாது.

08- சந்தேகநபரிடம் விசாரணை இடம்பெறும் போதும் வாக்குமூலம் பெறப்படும் போதும் சட்டத்தரணி சமுகமளிக்கமுடியாது.