மட்டு கல்லடி பிரதேசத்தை காத்தான்குடியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபையுடன் கல்லடி பிரதேசத்தை பிரதேசத்தை
இணைக்கம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ் மக்கள் விடுதலைப்
புலிகளின் மகளீர் அணி தலைமையில் கல்லடி சிவானந்தா மைதானத்திற்கு முன்னால்இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் ஒன்று திரண்டு  ஆர்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

கல்லடி தொடக்கம் மஞ்சந் தொடுவாய்  வரையான பிரதேசத்தை காத்தான்குடி
நகரசபையடன் இணைப்பதற்காகன முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி
ஆர்பாட்டத்திற்கான அழைப்பினை விடுத்துள்ளது.

இவ் அழைப்பினையடுத்து கல்லடி பிரதேச பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை சிவானந்தா மைதானத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள்  வடக்கு கிழக்கு இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என்பவர்களோடு தமிழர்கள் எவ்வாறு இணைவது, பிரிக்காதே பிரிக்காதே தமிழர்கள் பிரதேசங்களை, தமிழர்களுக்கு புதிய நகரசபை வேண்டாம் , தமிழர்களை மேலும் மேலும் வதைக்காதே, தமிழ்
தலைமைகளின் ஆளுமை வேண்டும், தமிழர்கள்  இனவாதியல்ல எங்களது அதிகாரங்களையே கேட்கின்றோம், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோசமிட்டு ஆர்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

எமது கல்லடி பிரதேசத்தை இன்னும் ஒரு பிரதேசத்துடன் இணைப்பதற்கும் எல்லையை பிரிப்பதற்கும் நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் மண்முனை வடக்கு பிரதேசத்துடன் இணைந்த  பழம்பெரும் பிரதேசம் கல்லடியாகும் எனவே எமது பிரதேசத்தில் இருந்து எல்லையை பிரிக்வேண்டும் என்ற கொள்கையை நிறுத்துவது நல்லது.

அதேவேளை இந்த கல்லடி பிரதேசத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட சனத்தொகையை கொண்ட பிரதேசம் 7 ஆயிரத்து 647 குடும்பங்கள் 13 கிராமசேவகர் பிரிவுகளை கொண்ட நாவலடி தொடக்கம் மஞ்சந்தொடுவாய்  தெற்குவரைக்கும்  எமது பிரதேசம் ஆகும்.

இந்த பிரதேசம் 1970 ம் ஆண்டுக்கு  முன்னராக ஒரு கிராமசபை  இயங்கிவந்தது இது காலப்போக்கில் மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைக்கப்பட்டு
இயங்கிவருகின்றது எனவே கல்லடி பிரதேசத்திற்கு புதிய நகரசபை இணைத்து தரவேண்டும் என சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்கின்றோம் என ஆர்பாட்காரர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சுலோகங்கள்ஏந்தியவாறு கோசமிட்டு  மஞ்சந் தொடுவாய்  தொழில் நுட்ப கல்லூரிவரை சென்று அங்கிருந்து மீண்டும் சிவானந்தா மைதானத்தை வந்தடைந்த பின்னர்ஆர்ப்பாட்டகாரர்கள் அகன்று சென்றனர்.

இதேவேளை இப்பகுதியில்  பொலிஸ் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.