கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா

(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்;)

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஷேட பொது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை (11) வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் மூன்று அமர்வுகளாக நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 656 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

பட்ட மேற்படிப்பு முதுமானி பட்டம் தத்துவம் ஒருவரும்,   பட்ட மேற்படிப்பு முதுமானி கலைப் பட்டம் ஒருவரும், பட்ட மேற்படிப்பு முதுமானி கலைப் பிரிவில் 83 பேரும், பட்ட மேற்படிப்பு முதுமானி பொருளாதார அபிவிருத்தி பிரிவில் 2 பேரும், தாதியர் விஞ்ஞான பிரிவில் 21 பேரும், விஞ்ஞான பிரிவில் 62 பேரும், கலைப் பிரிவில் 306 பேரும், விஞ்ஞான முகாமைத்துவப் பிரிவில் 3 பேரும், கலை தொடர்பாடல் பிரிவில் 2 பேரும், கலைப் பிரிவு மொழித்துறையில் 14 பேரும்,  வர்த்தக முகாதை;துவப் பிரிவில் 81 பேரும், வர்த்தகத் துறையில் 60 பேரும், திருமலை வாளாகத்தில் வெளிவாரியாக பயின்ற வர்த்தக முகாதை;துவப் பிரிவில் 14 பேரும், வர்த்தகத் துறையில் ஒருவரும், கலைப் பிரிவில் 5 பேரும் பட்டம் பெற்றனர். 

முதலாவது அமர்வில் 189 பேருக்கும், இரண்டாவது அமர்வில் 220 பேருக்கும், மூன்றாவது அமர்வில் 247 பேருக்கும் பட்டமளிப்பு நடைபெற்றது.