சமுர்த்தி பயனாளிகளுக்கு LAUGFS GAS வழங்கும் நிகழ்வு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் LAUGFS GAS இணைந்து பிரஜா சவிய LAUGFS GAS   தேசியவேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசசெயலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் சமுர்த்தி வங்கியில் சமுர்த்தி பயனாளிகளுக்கு LAUGFS GAS வழங்கும் நிகழ்வு 2017.11.16 திகதி வியாழக்கிழமை இன்றையதினம் வங்கியின் முகாமையாளர் திருமதி.சிவப்பிரியா சுதாகரன் தலைமையில் தம்பிலுவில் சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக  திருக்கோவில் பிரதேச  பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெயரூபன், தலைமையக சமுர்த்தி முகாமையாளர் திரு.ரி.பரமானந்தம் மற்றும் வங்கி உதவி முகாமையாளர் திரு. இ.ஞானரெத்தினம் மற்றும் உத்தியோகத்தர்கள்; ஆகியோர் பயனாளிகளுக்கு LAUGFS GAS வழங்கிவைப்பதையும் படத்தில் காணலாம்.