மதுபானத்திலேயே இனி வாகனங்கள் செலுத்தலாம் !

பெட்ரோல் மற்றும்  டீசலுக்கு  மாற்றாக இனி மதுபானம்  இருக்கும் என்றும், மதுபானத்தை  ஊற்றி வாகனம் செலுத்தலாம் என்றும்  பிரிட்டன் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக மதுபானத்தில் சிறு சிறு மாற்றங்கள் மட்டும் செய்தால் போதும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனை  சேர்ந்த  விஞ்ஞானிகள்  தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிபொருட்களான பெட்ரோல் மற்றும்  டீசலுக்கு  மாற்றாக புதிய எரிபொருளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்காக அவர்கள் மது வகைகளில் நிறைய சோதனைகள் செய்தனர்.

இதை மாதிரியாக வைத்து அவர்கள் இயக்கிய வாகனமும் மிகவும் சரியாகவே இயங்கி இருக்கிறது. அதிக மைலேஜும் கொடுத்துள்ளது.

மதுவில் இருக்கும் எத்தனால், பியூட்டனாலாக மாறினால் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும்.


ஆனால், மதுபானம்  கொண்டிருக்கும் எத்தனால் பொருட்களை பியூட்டனாலாக மாற்றுவது  கடினமாகும்.

அதை விரைவில் சரி செய்துவிடுவோம் என்றும்,  மற்ற எரிபொருட்களை விட மதுபானத்தைக் கொண்டு அதிக திறன் உள்ள எரிபொருளை உருவாக்க முடியும்  என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விரைவில் மதுபானம்  மூலம் இயங்கும் வாகனங்களை சாலையில் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.