தனி மனிதனில் கல்வியின் வகிபங்கு


புவியில் மனிதன் தோன்றி இன்று பல நூற்றாண்டுகளாயினும் மனிதனானவன் தனது வாழ்வில் அடைந்த முன்றே;றங்களுக்கும் அறிவியல் சார் பரிணாம வளர்ச்சிக்கும் பிரதான வரலாற்றுத் தளமாக கல்வியே காணப்படுக்pறது. இதன் பிரயோகத்தன்மை உலகமயமாதல் செயற்பாட்டிற்கும் காரணமாக அமைந்துள்ளது.

மனிதனை ஒரு முழுமையான பகுத்தறிவு வாதியாக மாற்றுவதிலும் கல்வியின் பங்கானது அளவிட முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது. இக்கல்வி அறிவைப் பெற்ற ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒரு வகையில் உலகின் உச்ச நிலையை அடையக்கூடிய சூழ்நிலையை இக்கல்வி ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இந்த வகையில் தனியாளைச் சமூகத்திற்கு பொருத்தமான ஆக்கத்திறனுள்ள பூரணமான மனிதனாக வடிவமைப்பதில் கல்வியின் பங்கானது அளப்பாரியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனையும் சமூகத்திற்குப் பொருத்தமான சமூகப்பிராணியாக வடிவமைப்பதில் கல்வியின் பங்கானது அளப்பாரியதொன்றாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு தனிமனிதனுள்ளும் புதைந்து கிடக்கும் உடல், உள, மனவெழுச்சி மற்றும் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றையும் இனங்கண்டு அதனை வெளிக்கொனர்வதிலும் வளர்த்துக்கொள்வதிலும் தேவையான அறிவினை வழங்கும் பிரதான மூலதனமாக கல்வியே காணப்படுகின்றது. இதனால் எழுச்சி பெறும் நிறை அறிவு கொண்ட மனிதன் அதனை சமூகத்தில் பிரயோகிக்க எத்தணிக்கும் போது அது சமூக வளர்ச்சியாக  உருமாறுகிறது.


இவ்வாறு கிடைக்கப் பெற்ற அறிவினை தான் மட்டும் அல்லாது சமூகத்துடன் ஒன்றினைந்து முன்னெடுக்கும் போது அது முழுமை நிலையை அடைவதுடன் அறிவிற்கு தலைமை தாங்கி வழிநடாத்திச் செல்லும் நற்பிரஜைகளை உருவாக்குவதிலும் கல்வி முனைப்பான முறையில் செயற்படுகிறது. இதனால் உருவாகும் அறிவு மமேதைகள் சமூகத்திற்காக பாடுபட்டு உழைக்கும் போது அது சமூகத்தினை உயர்நிலைக்கு இட்டுச் செல்வதாகவே அமைகின்றது.

கல்வியின் மற்றுமொரு பங்களிப்பு தனி மனிதiனை பொறுப்பு வாய்ந்த பிரஜையாக உருவாக்குதல். கல்வியானது ஒரு தனிமனிதனுக்கு முறையாக வழங்கப்படும் போது அவனது சிந்தனை கட்டுக்கோப்பானது ஒரு முறையான முறையில் செயற்பட ஆரம்பிக்கின்றன. இதனால் நன்மை தீமைகளை பிறித்தறியும் பக்குவத்தினையும் கல்வியறிவு தனிமனிதனுக்கு ஊட்டுகிறது. இதனால் தீமையான விடயங்களில் இருந்து அவை பாதுகாத்து விட்டு சமூகத்திற்கு பொருத்தமான பொறுப்புமிக்க மனிதனை உருவாக்க உதவுகிறது.

தனிமனிதனின் ஆற்றல்களை மென்மேலும் வளப்படுத்தி அதனை சமூகநல மேம்பாட்டிற்காக பிரயோகிப்பதில் கல்வியானது தூண்டுதல் அளிக்கின்றது. இதனால் தனிமனிதனானவன் ஒரு இலட்சியத்தினைக் கொண்டு அதனை நோக்கி பயணிக்கிறான்.  இதனால் தவறுகள் செய்வதிலிருந்தும் பாதுகாப்பினைப் பெறுவதோடு தனது சமூகத்தவருக்கும் வழிகாட்டியாக மாறுகிறான். 

மேலும் தான் கற்ற விடயத்தை சமூகத்தவருக்கு எத்தி வைக்கும் போது அறியாமை என்னும் இருளகற்றி  அறிவு என்னும் ஒளியேற்றவும் அவனது கல்வியறிவு தூண்டுதலாக அமைகின்றது. உதாரணமாக ஆசிரியர் பணியை குறிப்பிட முடியும் .ஒரு தனிப்பட்ட ஆசிரியரின் வழிகாட்டலின் கீழ் கற்ற பிரஜைகள் உயர்வடைவதுடன் அது தொடர் முறையில் அதிகரித்துச் செல்லும் போது அங்கு படிப்பறிவு கூடிய பண்பாடுமிக்க சமூகத்தவர் உருவாக அது ஏதுவாக அமைகின்றது.

தனி மனிதனாலேயே அதாவது தனிமனித இணைப்பாலேயே சமூகம் உருவாகின்றது. தனிமனிதன் விருத்தி செய்யப் பட்டு பூரணமான முறையில் அவன் மாறுகின்ற போது அதிலிருந்து உருவாகும் சந்ததியினரும் அதன் சேர்க்கையில் உருவாகும் சமூகமும் சிறப்பான முறையிலேயே அமையக் கூடும். அதனையே அரிஸ்டோட்டில் மனிதன் சமூகப்பிராணி இவனை சமூகத்திலிருந்து பிரிக்க முடியாத அளவுக்கு பிணைக்கப் பட்டுள்ளான் என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையினால் உளகலாவிய ரீதியில் சமூக முன்னேற்ற அபிவிருத்தி நிலைகளை அளவிடப் பயன்படுத்தும் மனித அபிவிருத்திச் சுட்டென் ஒரு தனிமனிதனின் கல்வியறிவினை அளவிடுவதன் ஊடாக சமூகத்திகன் கல்வி மட்டத்தினை தீர்மாணிக்கிறது.  இங்கு சமூகத்தினை அளவிடுவதற்கு பதிலாக தனிமனிதனின் கல்வியறிவினை அளவிட்டு அதனூடாக சமூக அபிவிருத்தி நிலைமைகளை தீர்மாணிக்கின்றது. எனவே தனி மனிதனின் பூரணமான செயற்பாட்டு அறிவிலேயே சமூகத்தின் அபிவிருத்திக்கான வளர்ச்சிப் பாதையும் தங்கியுள்ளது. என்பது இதனூடாக புலனாகின்றது. உதாரணமாக இலங்கை மக்களின் கல்வியறிவு சராசரி வீதம் 92.5மூ என்பதால் பிற சமூகத்தவர் மத்தியில் இலங்கையர்கள்; வேலை வாய்ப்புக்களை இபறும் போது அங்கு அவர்களுக்கான வாய்ப்பு முன்னுரிமைப் படுத்தப் படுகிறது. இதற்கான அடித்தளம் தனிமனித செயற்பாட்டில் கல்வியின் மூலம் ஏற்பட்டதேயாகும்.

தனி மனிதனின்பால் கல்வியறிவு பெற்று சமூகத்தினூடாகவே ஒரு நாட்டினது அரசியல் ,பொருளளாதார,சமூக,சமய வளர்ச்சியும் தங்கியுள்ளது. கல்வியறிவின் துணை கொண்டு மாத்திரமே சமூகத்தில் நிலவும் சீர்கேடுகள் களையப்பட்டு சட்டத்தின் ஆட்சியும் வலுப்பெற்று உருப்பெறும். இன்று நாடுகளிடையே முன்னேற்றம் அடைந்து காணப்படும் நாடுகள் கூட தனிமனித கல்வியறிவினை  உச்ச அளவில் பேணும் நாடுகளாகவே காணப்படுகின்றன. இங்கு தனிமனித கல்வியறிவு வீதமும் சமூகத்தின் அடைவு மட்ட முன்னேற்றமும் உச்ச அளவில்  காணப்படுவதற்கும் இதுவே காரணமாகும்.

அவ்வாறே சமூகநல மேம்பாட்டுத்துறையின் உச்ச வளர்ச்சியும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு ஒவ்வொரு தனிமனிதனும் கல்வியறிவு பெறும் வீதத்திலேயே தங்கியுள்ளது. எனவே தனிமனிதனின் கல்வியறிவு அங்கு முழுமை பெறும் போது மாத்திரம் சமூகத்திற்கு பொருத்தமான ஆக்கத்திறனுள்ள மனிதனாக அவனால்  உருவெடுக்க முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதனாலே சமூகத்தில் காணப்படும் ஒவ்வொரு தனிமனிதனும் கல்வியறிவு கொண்டு அவனை பூரணமான முறையில் உருவாக்கிக் கொள்வதற்கு கடமைப்பட்டவனாக மாறுகிறான்.

இதன் உன்மைநிலைத் தன்மையே சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த சமூகப் பகுத்தாரியாகவும் அவனை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆரம்ப காலங்களில் ஆண்கள் பெண்களுக்கிடையில் கல்வியைப் பெறுவதிலும் ஏனைய விடயங்களிலும் பாரிய ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டன. என்றாலும் பிற்பட்ட காலங்களில் தனிமனித முயற்சியின் காரணமாகவே பெண்கள் ஆண்களுக்கு நிகரான முறையில் கல்வி கற்கும் வாய்ப்பினை பெற முடிந்ததுடன் அதனூடாக சமூகத்ததவர்களிலும் தன்மதிப்பு உள்ளவர்களாக மாறலாயினர். இதனால் சமூக ஏற்றத் தாழ்வுகள் சீர் செய்யப்பட்டு ஆண், பெண் சமத்துவம் வலுவானதொரு முறையில் அமைய அது காரணமாகியது.

அதே போல் ஒரு தனிமனிதனின் கல்வியறிவினை பெற்றுக் கொள்ளும் போது அங்கு இயல்பாகவே சமூகப்பற்றும் அவனைப் பற்றிக் கொள்கிறது. இதனால் அவன் முன்னெடுக்கும் முயற்சிகளில் சமூகத்தின் வளர்ச்சியும் பிரதிபலிப்பதனைக் காணலாம். அதாவது, இன்று தனிமனிதனின் முயற்சியால் உருவாகும் புதிய கண்டுபிடிப்புக்களும் ஆராய்ச்சி விடயங்களும் தனிப்பட்ட நலனை ஒரு போதும் பிரதிபலிப்பதில்லை. மாறாக சமூகத்தின் பொது விடயங்களை முதன்மைப்படுத்தியதாகவே அமைகின்றது. இதனால் தனிமனிதனானவன் சமூகத்திற்கு பொறுப்புக் கூறக் கூடிய வகையிலும் பொதுநலப் போக்கினைக் கொண்டுள்ளவனாகவும் கல்வியானது அளப்பாரியதொரு பங்கினை ஆற்றுகின்றது.

இவ்வாறே தனிமனித இணைப்பால் உருவாகும் சமூகம் மூழ்கிப் போயிருக்கும் மூடநம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் களைவதில் வெறுமனே அனுபவமோ வாதங்களோ நடைமுறையில் காணப்படும் விடயங்களோ சாத்தியமானதில்லை
எனவே தனிமனிதனுக்கு கல்வியறிவு புகட்டும் போது அவர்கள் யதார்த்த நிலையின் உண்மையறிந்து உலக நடை பழகி அதில் வாழக்கற்றுக் கொள்கிறான். இதனால் சமூகத்தின் இப்பழைமைப் பண்பு புறக்கணிக்கப்பட்டு புதிய உலக நடையறிந்து அறிவியல் தன்மையின் யதார்த்த நிலை அறிந்த சமூகம் இதன் மூலம் உருவாக கல்வி வழியமைத்துக் கொடுக்கின்றது. அவ்வாறே தனிமனித பிணைப்பால் உருவாகும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் அடிப்படைக் கல்வியறிவு என்பதால் அதனைப்பெற்று முழுமையடையும். தனிமனிதனும் சமூகத்திற்கு பொருத்தமான ஆக்கத்திறனுள்ள பிரஜையாக உருவெடுப்பான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

SH.SANJIYA
EDUCATION AND CHILD CARE
EASTERN UNIVERSITY
SRI LANKA