தாந்தாமலை ஆலயத்தில் தீட்ஷை வழங்கல்


கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்றதும் தொன்மை வாய்ந்ததும் சின்னக் கதிர்காமம் என சிறப்பித்துக் கூறப்படுவதுமாகிய தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஏவிளம்பி வருடம் தைமாதம் 08ஆம் நாள் 2018.01.21ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை சமய தீட்ஷை வழங்கல் நிகழ்வு பக்தி பூர்வமாக இடம்பெறவுள்ளது.

எனவே இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுள்ளனர்.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மற்றும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவிருப்பதாகவும் ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ஆலய பரிபாலன சபையினர் கேட்டுள்ளனர்.

முற்றுமுழுதாக இலவசமாக இடம்பெறும் இந்நிகழ்சாவில் ஆசார சீலர்களாகவும் அன்றைய தினம் விரதமிருந்தும் தீட்ஷையினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் முன்கூட்டிய பதிவுகளுக்கு செயலாளர் பொ.டிமலேஸ்வரன் அவர்களை 0766 218 401 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

இன்றைய சமூகத்தில் பல்வேறான சமூ சீர்கேடான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமைக்கு காரணம் ஆன்மீக சிந்தனையற்ற தன்மையும் நல்லொழுக்க விழுமியங்களைப் பின்பற்றாமையுமே ஆகும்