இன்றைய மாணவர் சமுதாயமும் தனியார் வகுப்புக்களும்


இன்று எமது உலகமானது  பல்வேறு வழிகளில் அபிவிருத்தி அடைந்து கொண்டு வருகின்றது. இவ்வாறு அபிவிருத்தி அடைவதற்கு நாட்டில் வாழும் மனிதர்களின் கல்வி அறிவு விருத்தியடைய வேண்டும். ஆகவே இன்று கல்வி அறிவானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.எனவே நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்யும் கல்வியினை மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழங்க வேண்டும்.எமது நாட்டில் C.W.W.கன்னங்கரா அவர்களினால் 1946ம் ஆண்டு இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் அனைவருக்கும் இலசமாக வழங்கப்பட்டது.
                       
உலக நாடுகளை பொறுத்த வரையில் இலங்கை அரசே கல்விக்காக அதிகளவு செலவினை மேற்கொள்கிறது. அத்துடன் அரசு மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் அதிக அக்கறையினை செலுத்தி வருகின்றது. இதற்காக பல கொள்கைகளினை உருவாக்கியுள்ளது. பாடசாலை கல்வியினை மேம்படுத்துவதற்காக, மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிக முக்கியத்துவமுடைய ஆசிரியர்களை அரசானது பல வழிகளில் ஊக்குவிக்கின்றது. ஆரம்ப காலத்தினை எடுத்து நோக்குவமானால் மாணவர்களின் கல்வியானது பாடசாலையினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்தது.

இக் காரணத்தினால் பாடசாலையானது அனைவரினாலும் மதிக்கப்படுகின்ற ஓர் இடமாக காணப்பட்டது. பிற்பட்ட காலத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தமது பாட விதானத்தை கற்ப்பிப்பதற்கும், அதற்கான தெளிவான விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடசாலையில் வழங்கப்படும் நேரம் போதாமல் காணப்பட்டது. இதன் காரணமாக பாடசாலை தவிர்ந்த நேரங்களில் மாணவர்களை பிரேத்தியேகமாக அழைத்து ஆசிரியர்கள் தமது கற்ப்பித்தலை மேற்கொண்டனர்.இவ்வாறு ஆசிரியர் மேற்க்கொண்ட கற்பித்தல் நடவடிக்கையானது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், பாடசாலையின் அபிவிருத்திக்கும் துணை புரிந்தது.

இவ்வாறு பாடசாலையினையும் மாணவர்களையும் மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் மேலதிக கற்ப்பித்தல் நடவடிக்கையானது இன்று பிரித்தியேக வகுப்புக்களாக உருமாறியுள்ளது என்றே கூறலாம். அன்று மாணவர்களின் நலன் கருதி பாடசாலை ஆசிரியர்களால்  இலவசமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த மேலதிக வகுப்பக்கள் இன்று நாகரீகத்தினையும் வருமானத்தினையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய பங்கினை வகிக்கின்ற பிரித்தியேக வகுப்புக்களாக தோற்றம் பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் இவ் தனியார் வகுப்பானது மெல்ல கற்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கே அதிகம் தேவைப்பட்டது. ஆனால் இன்று திறமையாக கற்கும் மாணவர்கள் கூட தனியார் வகுப்புக்கள் இல்லாவிட்டால் தமது கல்வி  அபிவிருத்தி இல்லை என்று கூறும் அளவிற்கு தனியார் வகுப்பானது முக்கியத்துவம் அடைந்துள்ளது.

                 
இத்தகைய தனியார் வகுப்புக்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சாதக நிலையினை ஏற்படுத்துவது மட்டுமன்றி பாதக நிமைமையினையும் ஏற்படுத்துகின்றது. அது எவ்வாறு என்று நோக்குவமானால். இன்றைய மாணவ சமூதாயத்தின் கல்வி தரத்தினை உயர்த்தும் ஒன்றாக தனியார் வகுப்புக்கள் மாறிவிட்டன. பாடசாலையில் ஆசிரியர்க்கு கற்பிப்பதற்கு வழங்கப்பட்ட நேரம் 40 நிமிடங்களோயாகும். இந்த 40 நிமிடத்தில் ஒரு ஆசிரியரால் எவ்வாறு மாணவர்களுக்கு ஒழுங்கான முறையில் கற்பிக்க  முடியும். எனினும் தனக்கு வழங்கப்பட்ட இந்த நேரத்திலேயே தான் ஆசிரியர் தான் கற்ப்பிக்க வந்த விடயத்தினை மேலோட்டமாக கற்ப்பித்து விட்டு செல்கின்றார்.

இச் சூழ்நிலையானல் சில மாணவர்களுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. இச் சந்தர்ப்பத்திலேயே  மாணவர்களுக்கு பிரித்தியேக வகுப்பின் அவசியம்  தேவைப்படுகின்றது. அத்துடன் பாடசாலையில் கற்றல் கற்ப்பித்தல் நடவடிக்கை தவிர்ந்து ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகள் (விளையாட்டு, மாணவர்தினம், தமிழ் மொழி தினம்) நடைபெறுவதனால் சில சந்தர்ப்பங்களில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தங்களுக்கு வழங்கப்பட்ட பாடதிட்டத்தினை முழுமையாக கற்ப்பிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. இதனால் சில பாடங்களை மேலோட்டமாகவே கற்ப்பிக்கின்றனர். ஆனால் பிரத்தியேக வகுப்புக்களில் இத்தகைய செயற்பாடுகள் இன்றி கற்றல் செயற்பாடுகளே முழுமையாக இடம் பெறுகின்றது. எனவே தான் பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களினால் அதிக பயனை பெறக்கூடியதாக உள்ளது.

 மற்றும் நேர முகாமைத்துவம் ஒழுங்கான முறையில் பேணப்படாத பாடசாலைகளில் ஆசிரியர்களது நேர முகாமைத்துவமும் குறைவானதாகவே காணப்படுகின்றது. இதனால் வழங்கப்பட்ட 40 நிமிடங்களிலும் குறைவான நிமிடங்களையே அவர்கள் மாணவர்களின் கற்ப்பித்தல் நடவடிக்கைகளுக்காக செலவழிக்கின்றனர். இது முற்று முழுதாக பாடசாலை முகாமைத்துவத்தின் குறைபாடாகவே காணப்படுகின்றது. இவ்வாறு விரையமாக்கும் சில நிமிடங்கள் இறுதியில் மாணவர் கற்ப்பித்தலுக்கு தடையாக அமைகின்றது.இதனால் அவர்கள் பாடசாலையில் பாடம் தொடர்பான முழுமையான அறிவை பெற முடியாது போகின்றது. இச் சந்தர்ப்பத்திலும் மாணவர்களுக்கு பிரித்தியேக வகுப்பின் அவசியம்  தேவைப்படுகின்றது.
                       
பிரித்தியேக வகுப்பு பணத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைவதனால் அங்கு நேர முகாமைத்துவம் ஒழுங்கான முறையில் பேணப்படுகின்றது.இதனால் அதிக நேரம் மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது. இதனால் மாணவர்கள் பிரித்தியேக வகுப்பில் மேலதிக விடயங்களை கற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு கற்று கொள்வதனால் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்கின்றனர். மற்றும் பிரித்தியேக வகுப்பானது பிரித்தியேக வகுப்புக்களை நடாத்தும் நிறுவனங்களது நன்மதிப்பு சம்பந்தப்பட்டதாக அமைவதினால் குறிப்பட்ட நிறுவனமானது சமூகத்தில் தனக்குரிய இடத்தினை பேணுவதற்கு மாணவர்களின் சிறந்த பெறுபேறுகள் அவசியமாகின்றது. இதனால் தனது நிறுவனத்தில் கற்ப்பிக்கும் ஆசிரியர்களின் கற்ப்பித்தல் நடவடிக்கையினை ஊக்கிவிக்கின்றனர்.இதனால் பிரித்தியேக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்கள் அதிக நன்மையினை பெறுகின்றனர்.
                 
பாடசாலைகளில் மாணவர்கள் அதிக கட்டுப்பாடுகளுடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இவ் அதிக கட்டுப்பாடானது சில மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அசௌகரிய நிலையினை ஏற்படுத்துகின்றது. இதனால் அவர்களது கற்றல் நடவடிக்கை பாதிப்படைகின்றது. ஆனால் பிரித்தியேக வகுப்புக்களில் இத் தகைய கட்டுப்பாடுகள் குறைவானதாகவே காணப்படுகின்றது. இத்தகைய நிலை மாணவர்களின் சுதந்திரமான கற்றல் நடவடிக்கையினை தோற்றுpக்கின்றது. இதனால் மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இது சிறந்த பெறுபேற்றுக்கு அடிப்படையாக அமைகின்றது.
                     
மற்றும் பிரித்தியேக வகுப்புக்கள் இன்றைய கால கட்டத்தில் அதிக வசதிகள் கொண்ட வகுப்புக்களாக மாற்றமடைந்துள்ளது. பிரித்தியேக வகுப்புக்களை நடாத்தும் தனியார் நிறுவனங்கள் தங்களது அனுமதியினை அதிகரிப்பதற்காக இத்தகைய அதிக வசதிகளினை ஏற்படுத்துகின்றனர். இச் சூழ்நிலையானது மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை துண்டுவதாக அமைகின்றது. மற்றும் இன்றைய கால கட்டத்தில் பாடசாலை ஆசிரியர்கள் தண்டனை என்னும் ஓர் எண்ணக்கருவினை தங்களிடையே கொண்டுள்ளனர். தண்டனை வழங்கினால் மாத்திரமே மாணவர்களை நல்வழிப்படுத்தலாம் என்ற அபிப்பிராயத்தை கொண்டுள்ளனர்.இத் தண்டனையானது சில சந்தர்ப்பங்களில் மாணவர் மத்தியில் ஆசிரியர்கள் தப்பான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கின்றது.

இந் நிலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கையில் பாதிப்படைய செய்கின்றது.ஆனால் பிரித்தியேக வகுப்புக்களில் இத்தகைய தண்டனைகள் குறைவானதாகவே காணப்படுகின்றது. இந்நிலை மாணவர்களின் சுதந்திரமான கற்றல் நடவடிக்கையினை தோற்றுவித்து சிறந்த பெறுபேற்றுக்கு அடிப்படையாக அமைகின்றது.

மற்றும் பாடசாலைகளில் பரீட்சையானது வருடத்தில் 3 தடவைகள் மாத்திரமே நடைபெறுகின்றது. இங்கு பரீட்சையானது வருடத்தில் 3 தடவைகள் நடைபெறுவதனால் மாணவர்களுக்கு பரீட்சையில் இவ்வாறு எழுத வேண்டும்  என்ற பயிற்ச்சியினை மாணவர்கள் பெற்றுக்கொள்வது குறைவாகவே காணப்படுகின்றது. இருப்பினும் பிரித்தியேக வகுப்புக்களில் ஒவ்வொரு பாடமுடிவிலும் பரீட்சையானது நடைபெறுகின்றது. இதன் மூலம் மாணவர்கள் அந்த பாடத்தில் தெளிவான விளக்கத்தினை பெற்றுக் கொள்வதோடு பொது பரீட்சைக்கு தம்மை தாயார் படுத்துவதற்கும் இவ் தனியார் வகுப்புக்கள் சாதகமாக அமைகின்றது.

இத்தகைய நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனியார் வகுப்புக்களானது இன்றைய கால கட்டத்தில் வெறுமனே கற்றல் நடவடிக்கைக்கு மட்டுமல்லாது அது ஓர் நாகரிக வளர்ச்சியின் ஓர் அங்கமாக திகழ்கின்றது. அதாவது இன்று தனியார் வகுப்பானது ஒரு பொழுது போக்கு அம்சமாகவும் மாறியுள்ளது. அதாவது  உண்மையில் முன்னர் மாணவர்கள் ஆசிரியர் தமக்கு கற்ப்பித்தாலும் அது விளங்கவில்லை என்பதற்காக தாம் கடினமான பாடங்களாக கருதும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கே தனியார் வகுப்புக்களுக்கு சென்றார்கள். எனினும் இன்றைய மாணவர் சமூதாயம் தழிழ், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களுக்கும் தனியார் வகுப்புக்களுக்கு செல்கின்றார்கள். இவ்வாறு மாணவர்கள் தனியார் வகுப்புக்களை நாடிச் செல்லுவது ஆசிரியர்களின் தவறா? இல்லை பெற்றோர்களின் தவறா?
         
இந்த நிலைமை அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமாக அமையாது. ஏன்னெனில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கும் அனைத்து பாடங்களுக்கும் தனியார் வகுப்புக்கு செல்வது கடினமானதொன்றாகும்.எனினும் தமது சக மாணவர்கள் பிரித்தியோக வகுப்பிற்கு செல்வதனால் இம் மாணவர்களின் மனநிலை பாதிப்படைகின்றது.இந்நிலை அவர்களின் குடும்பத்தில் பொருளாதார ஏற்படுத்துகின்றது.
                 
தனியார் வகுப்புக்களில் உள்ள அதிக வசதி, அதிக கட்டுப்பாடு இன்மை போன்ற காரணங்கள்  மாணவர்களுக்கு நன்மை அளித்தாலும் இக் காரணங்கள் மாணவர் மத்தியில் ஒழுக்க சீரகேடுகள் ,நேர முகாமைத்துவம், பணத்தினை வீண்விரயம் செய்தல் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கும் காரணமாக அமைகின்றது.
                   
எனவே தனியார் வகுப்பானது பல நன்மைகளை கொண்டு அமைந்தாலும் அவற்றால் பல தீமைகளும் தான் அமைகின்றது. இருந்தும் இப் பிரித்தியோக வகுப்புக்களின் தீமைகளை மாணவர்கள் உணர்ந்தாலும் சக மாணவர்களின் கேலிப்பேச்சு, பெற்றோர்களின் கண்டிப்பு, அனைத்து வகுப்பிற்கும் வந்தால் மாத்திரம் அனுமதி கிடைக்கும் எனும் தனியார் வகுப்புக்களை நடாத்தும் நிறுவனங்களின் கூற்று ,நாகரீக வளர்ச்சி போன்ற காரணங்களினால் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களால் தனியார் வகுப்புக்களுக்கு செல்வதனை தவிர்க்க முடியாது உள்ளது. ஏனவே இந்த உலகத்தில் எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மையும் தீமையும் காணப்படுகின்றது.பாலையையும் நீரையும் கலந்து வைத்தால் நீரை விடுத்து பாலை மாத்திரம் பருகும் அன்னப்பறவை போல மாணவர்களாகிய நாம் இத் தனியார் வகுப்புக்களில் காணப்படும் தீமையினை விடுத்து நன்மையான விடயங்களை எடுத்து கொள்வமாக.
                                         
வே.விதூர்சனா
கிழக்கு பல்கலைக்கழகம்