கல்லடி கடற்கரை தூய்மை ஆக்கும் நிகழ்வும்

(சிவகுமார்-கல்லடி)

மட்டக்களப்பு  நகரின்  எதிர்கால  இளம்    சந்ததியினரின்  வாழ்விலே   இலவச கல்வி   வழங்கி     ஒளிமயமான ஒரு  வாழ்க்கையை  வழங்கிட    "Active Learning Center"    கல்லடியில் இன்று     புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 "Active Learning Center" திறப்பு விழாவினை முன்னிட்டு        கல்லடி கடற்கரையை  அழகு படுத்தும்    நோக்கத்தோடு          மிகப்பெரிய தூய்மையாக்கும்   சிரமதானப்   பணி செய்யப்பட்டது..
ஏற்பாட்டாளர்களின்  அழைப்பை ஏற்று கல்லடி கடற்கரைக்கு  வருகை  தந்த   பெரும் பாலான இளைஞர் ,யுவதிகளும் மற்றும்  பல்வேறு நாடுகளில் இருந்து வந்த  வெள்ளையர்களும் மிக உற்சாகத்துடன்  துப்பரவு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வு காலை 7.௦௦ மணி முதல் 9.௦௦ மணி வரை நடை பெற்றது .