மட் - கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய பழைய மாணவர்களின் முன்னெடுப்பில் மாணவர் பதிவுப்புத்தகம் வெளியீடு



மட் - கோட்டைமுனை கனிஷ்ட  வித்தியாலய பழைய மாணவர்களின் முன்னெடுப்பில் பாடசாலையில் மாணவர் பதிவுப்புத்தகம் நேற்று 19-03-2018 வெளியிடப்பட்டது. அதிபர் திரு.த.அருமைத்துரை அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இவ்வெளியீடு மறைந்த பழைய மாணவர் சங்கத்தின் உப செயலாளர் அமரர் மகரிஷி  அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டது.

புத்தகம் தொடர்பான விளக்கத்தை பழைய மாணவர் ப. ரஜீவன் அவர்கள் எடுத்துக்கூறினார். புத்தகத்தை அமரர் மகரிஷி அவர்களின் பெற்றோர்களான திரு.திருமதி. யாதவன் ஆகியோர் வெளியிட மாணவர்கள் பெற்றுகொண்டார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்த மாணவர் பதிவு புத்தகம் மூலமாக மாணவர்கள் பாதுகாப்பில் கருத்தில் கொண்டு மாணவர்கள் எவ்வகையில் பாடசாலை வருதல் மற்றும் புறப்பட்டு போதல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் தொடர்பான ஆவணப்படுத்தப்பட இருக்கின்றது. மேலும் அவர்களது தாமதமான வருகைக்கு காரணம், விடுமுறைக்கான காரணங்கள் என்பன ஆவணபடுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள பட இருகின்றன.

மேலும் மாணவர்கள் கல்வி மற்றும் இணைப்பாட விதானம் தவிர்த்து சமுக அளவில் நற்பிரஜைகளாக விளங்க வேண்டுமென பழைய மாணவர்கள் சமுகம் விரும்புகின்றது. பிரதானமாக மாணவர்களின் நன்நடத்தை பாடசாலைக்குள்ளும் பாடசாலைகளுக்கு வெளியேயும் கண்காணிக்கப்படுகின்றது. இவற்றை அவதானித்து அவர்களை கௌரவிக்க பாடசாலை பழைய மாணவர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த செயல் திட்டத்தின் மூலமாக 1000 இலவச புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இதில்  பெற்றோர், பழைய மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.