மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு ஏன் இந்த அவலநிலை?

இலங்கையிலேயே மட்டக்களப்பு கல்லடி பாலம் என்றால் அதற்கு ஒரு தனித்துவம், பெருமை உள்ளது


முன்னால் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் புதிய வீதித்திட்டத்தின் கீழ் பழைய பாலம் அப்படியே இருக்க விசாலமான புதிய பாலம் எந்தவொரு தடங்களும் இல்லாமல் இருவழி பாதையாக அமைக்கப்பட்டு, உண்மையிலேயே மட்டக்களப்பிற்கு பெருமை சேர்க்கும் வண்ணமாக பிரமாண்டமாக ஜொலித்தது.
இரவிலும் நல்ல தரம்வாய்ந்த ஏறத்தாழ 16 தெருவிளக்குகள் போடப்பட்டு அவை அனைத்தும் இரவில் பாலத்திற்கும், மக்களுக்கும் பலன் தருமாறு மிகவும் பிரகாசமாக வெளிச்சத்தை தந்து பெருமையூட்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் அது படிப்படியாக குறைந்து இன்று இருள் சூழ்ந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனூடாக பயணம் செய்யும்  பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது
மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு பகுதியை இணைப்பதில் இப்பாலம் மிகவும் முக்கியத்துவம் வகிக்கின்றது.

அப்படி பெருமைவாய்ந்த எமது இந்த பாலத்திற்கு ஏன் தொடர்ந்தும் தெருவிளக்குகள் எரிவதில்லை?

இலங்கையில் சாதாரண தெருக்களில் கூட மிகவும் நவீன முறையில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுவரும் இந்த காலகட்டத்தில், நன்றாக ஜொலித்துக்கொண்டிருந்த எமது வரலாற்றுப்பெருமை வாய்ந்த இந்த கல்லடி பாலமானது, ஏன் இன்று கைவிடப்பட்ட நிலையிலுள்ளது?


பொறுப்புள்ள  அதிகாரிகள்  இதை கருத்தில் கொண்டு இவ்வீதியின் மின்குமிழ்களை தொடர்ந்து கண்காணித்து ஒளிர வைப்பதுடன் பெயரளவில் மாத்திரமல்லாமல் பிரகாசம் கூடிய பரந்த பிரதேசத்தை ஒளிபாச்சும் அளவு செல்லும், வரும் இருபக்க சாலையோரம் தரமான மின்குமிழ்களை பொருத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .