மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ஏ.எஸ். யோகராசா 33 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு


(சா.நடனசபேசன்)
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ஏ.எஸ். யோகராசா  33 வருட கல்விச் சேவையில் இருந்து 19.04.2018 வியாழக்கிழமை ஓய்வு பெறுகின்றார்.

 கல்வி அமைச்சின் இடமாற்றத்திற்கு அமைய 2010 ஆம் ஆண்டில் இருந்து மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில்  சுமார் 8 வருடமாக முதல்வராக கடமையாற்றிய நிலையில் ஓய்வு பெறுகின்றார்.
இவர்; ஜோசப் அன்ரனி சின்னராசா  அருள்மேரி அன்ரனி ஆகியோருக்குப் பெரியகல்லாற்றில் பிறந்த இவர் மட்டக்களப்பில் வசித்துவருகின்றார்.
ஆரம்பக்கல்வியை பெரியகல்லாறு ஆரம்பப் பாடசாலையான விநாயகர்  வித்தியாலயத்திலும்  இடைநிலைக் கல்வியினை மட்டக்களப்பு புனிதமிக்கல் கல்லூரியிலும் சாதாரணதரம் மற்றும் உயர்தரத்தினை  கோட்டமுனை மகாவித்தியாலயத்திலும் பயின்று  கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டத்தினையும் நிறைவு செய்த இவர் ஆரம்பத்தில் சில காலம் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
கலைப்பட்டத்தினை நிறைவு செய்த இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் டிப்ளோமாவைக் கற்று விஷேட சித்தியைப்பெற்றுள்ளார்.  அத்தோடு கல்வி முது மானிப்பட்டம் பெற்றதுடன் கல்வி அமைச்சினால் 2000 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மூலம்  தாய்லாந்திற்குச் சென்று ஆசிய தொழில் நுட்ப பல்பலைக்கழகத்தில் ஆசிரிய கல்வி அபிவிருத்தி தொடர்பான  டிப்ளோமா பட்டத்தினைப்பெற்று 2004 ஆம் ஆண்டு  திறந்த பல்கலைக்கழகத்தில்  ஆசிரியர் கல்வி முதுமானிப்பட்டமும்  கொழும்பு  பண்டாரநாயக்க சர்வதேச கற்கை நிலையத்தில் வெளிநாட்டு விவகாரம் தொடர்பான பட்டமும்,பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமாவும்  பெற்றதோடு தற்போது தேசிய கல்வி நிறுவகத்தில்  கல்வி முது கலைத் தத்துவமானி பட்டத்தினைப் பெறுவதற்காக பயின்றுகொண்டு இருக்கின்றார.;
1985 ஆம் ஆண்டு  பட்டதாரி உதவி ஆசிரியராக கல்வி புலத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஏ.எஸ் யோகராசா அவர்கள் 1991 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று சேவையாற்றும் காலத்தில் 1993 ஆம் ஆண்டு  வவுனியா தேசியக்கல்விக்கல்லூரியில் ஆரம்பநெறிக்கான உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
1995 ஆம் ஆண்டு   ஆசிரியர் கல்வியியலாளர் சேவை ஆரம்பிக்கப்பட்டபோது 1995 இல் ஆசிரியர் கல்வியியலாளர் சேவை 2-11 நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் மட்டக்களப்புத் தேசியக்கல்விக்கல்லூரிக்கு விரிவுரையாளராக இடமாற்றம் வழங்கப்பட்டு சேவையாற்றிய காலத்தில்  2002 ஆம் ஆண்டு மட்டக்களப்பு தேசியக்கல்விக்கல்லூரி தாளங்குடாவிற்கு இடமாற்றப்பட்டதில் இருந்து உபபீடாதிபதியாக  சேவையாற்றியநிலையில்  அரசினர் ஆசிரியர் கலாசாலைக்கு முதல்வராக நியமிக்கப்பட்டார்.
 நியமிக்கப்பட்டு சுமார் 8 வருடகாலத்தில்  இலங்கையின் நாலாபாகங்களிலும் இருந்து 4000 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களை பயிற்சி வழங்கி பாடசாலைகக்கு  அனுப்பியுள்ளார்
இவர் கல்வி உளவியல் நூல்களான நுண்ணறிவு,ஊக்கல்  போன்றனவும்  ஆரம்பக்கல்விக்கான சிறுவர் பாடல்தொகுப்பு உயர்தர கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான அரச அறிவியல் நூல்களும் இவரால் வெளியிடப்பட்டு இருப்பதுடன் இவரது 25 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் தேசியப்பத்திரிகைகளில் அண்மைக்காலமாக வெளிவந்துள்ளது
அத்தோடு    திறந்த பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக  கடமையாற்றுவதுடன்  பட்டப்பின் கல்வி டிப்ளோமா ஆசிரியர்களுக்கு முதன்மை ஆசிரியராகவும் இருப்பதுடன்; கல்வி மானிப் பட்டத்தினை மேற்கொள்ளும் தேசியகல்வி நிறுவகத்தின் மட்டக்களப்புப் பிராந்திய இணைப்பாளராகவும் கடமையாற்றிவருகின்றார்.