மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி



தம்பிலுவில் பெரிய முகத்துவாரத்தில் இன்று  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருக்கோவிலை நோக்கி  பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்  ஒன்று கட்டுப்பாட்டை இழந்து  வீதியை விட்டு விலகி  அருகே இருந்த தூண்   ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது 

திருக்கோவிலை சேர்ந்த  அருள் எனும்  இளைஞரே மேற்படி விபத்தில்  பலியாகியுள்ளார். 
காயமடைந்தவர்  திருக்கோவில் ஆதார  வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
இதன் போது அங்கு அம்புலன்ஸ் இருக்கவில்லை என கூறி மக்கள் கோபத்தில் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்த போது சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு பின்பு  போலீசார் சம்பவம் இடத்திற்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பில் வைத்தியரை தொடர்பு கொண்டபோது
வைத்தியர் கூறுகையில் .

மேற்படி காயமடைந்தவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் தலையில் பலத்த காயத்துடன் ,  அதிகளவில் இரத்த போக்கு காணப்பட்டது. எம்மால் முடிந்த சிகிச்சையை நாம் வழங்கியிருந்தோம்  .  எம்மிடம் அந்த நேரம் அம்புலன்ஸ் வண்டி இல்லாமையை அடுத்து நாம் வேறு வைத்தியசாலையை தொடர்புகொண்டு கடைசியாக அட்டாளைச்சேனை வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டி வரும் வேளையில் விபத்தில் காயமடைந்தவர் இறந்துள்ளார்.

சித்திரை புத்தாண்டிலும் கூட நாம் காலையில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.  மக்கள் ஆத்திரப்பட்டு இப்படி வைத்தியசாலையை தாக்க வருவது போன்ற செயற்பாடுகள் எமக்கு கவலையை தருகின்றது  என வைத்தியர் கூறினார்

இவ்விபத்து தொடர்பாக திருக்கோவில்  பொலிஸார் மேலதிக விசாரனணகளை மேற்கொண்டு வருகின்றனர்
.
அம்பியூலன்ஸ் சாரதி இன்று விடுமுறையில் சென்றுள்ளார்.

வைத்தியசாலை நிர்வாகம்  அம்பியூலன்ஸ் வாகனத்தை  எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் .

சாரதி விடுமுறையில் போயிருந்தால்  பதில் கடமைக்கு வேறு ஒருவரை ஏன் நியமிக்கவில்லை ?