பண்டிகைக் காலத்தில் மக்கள் மிக அவதானம்

தமிழ் - சிங்கள புதுவருடத்தை கொண்டாடுவதன் பொருட்டு பட்டாசு வெடிப்பொருட்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு மீண்டும் கோரப்பட்டுள்ளது.

வெடிப்பொருட்கள் கையாளும் போது பல விடையங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தேசிய மருத்துவமனையில் திடீர் அனர்த்த பிரிவு பயிற்சியாளர் புஸ்பா ரம்யானி சொய்சா கோரியுள்ளார்.

வெடிப்பொருட்களை சற்று தூரத்தில் வைத்து பற்றவைக்க வேண்டும் எனவும், எப்போதும் பாதுகாப்பு வழிமுறைகளை கைகொள்ளுமாறும் கோரியுள்ளார்.

இதனிடையே, மது பாவனையை விடுத்து புதுவருடத்தை கொண்டாடுவதன் மூலம் அதன் முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என மதுபான மற்றும் போதைவஸ்து தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

மதுபானம் அருந்துவதால் மகிழ்சியை அனுபவிக்க முடியும் என சிலர் கருதுகின்ற போதிலும், மதுவருந்துவதால் மகிழ்ச்சி இல்லாமலே போவதாகவும் இந்த நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மதுசாரம் அருந்துவதும் மனிதனின் உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் ஒன்றும் இருக்காது என ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.